மீனா, சிம்ரன், ஷங்கர், பிரபுதேவா.. கோவாவில் மஜா பார்ட்டி பண்ண பிரபலங்கள்.. மகேஸ்வரியை நினைவிருக்கா?
சென்னை: 90ஸ் பிரபலங்கள் ஒன்று சேர்ந்து கோவாவில் பார்ட்டி நடத்திய புகைப்படங்களை நடிகை மீனா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகைகளின் பார்ட்டிகளில் பொதுவாகவே நடிகர்கள் தான் அதிகளவில் தென்படுவார்கள். ஆனால், சற்றே வித்தியாசமாக இயக்குநர்கள் ஷங்கர், கே.எஸ். ரவிகுமார் மற்றும் லிங்குசாமி உள்ளிட்ட பிரபலங்களும் சொகுசு படகில் லூட்டி அடித்துள்ளனர்.
சென்னையில் பார்ட்டி என்றாலே சினிமா பிரபலங்கள் தெறித்து ஓடி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், 90ஸ் பிரபலங்கள் ஒட்டுமொத்தமாக கிளம்பி கோவாவுக்குச் சென்று பார்ட்டி பண்ணியுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

எல்லாருமே மிஸ்டர் ஒயிட் விளம்பரம் போல வெள்ளை நிற உடைகளில் சொகுசு படகில் கொடுத்துள்ள போஸை பார்த்தாலே ரசிகர்கள் செம ஹாப்பி ஆகிவிடுவார்கள். அந்தளவுக்கு மொத்த ரெட்ரோ நினைவுகளையும் இந்த போட்டோக்கள் தாங்கி நிற்கின்றன.
கோவாவில் 90ஸ் பிரபலங்கள் பார்ட்டி: இந்த கால சினிமா பிரபலங்கள் போல 90ஸ் காலத்தில் படங்களை எடுத்த நடிகர்களும், நடிகைகளும், இயக்குநர்களும் ஈகோ எல்லாம் அதிகம் பார்க்காமல், எல்லாருமே ஒரே குடும்பமாக பணியாற்றிய நிலையில் தான் அடிக்கடி இப்படி ரீ யூனியன் எல்லாம் செய்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்து வருகின்றனர். நண்பர்களுடன் கோவாவுக்கு டூர் போட்டாலே கடைசி வரை பிளான் வேலைக்காகாது என்று ஏகப்பட்ட மீம்கள் வைரலாகி வரும் நிலையில், பக்காவாக பிளான் போட்டு ஒட்டுமொத்த பிரபலங்களும் கோவாவுக்கு சென்றுள்ளனர்.

மீனா, சிம்ரன், மகேஸ்வரி: மீனா, சிம்ரன் எல்லாம் போட்டிப் போட்டு நடித்த நிலையிலும், நல்ல தோழிகளாக வலம் வருகின்றனர். டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றிக்குப் பிறகு சிம்ரன் தனது நண்பர்களுடன் நல்ல டூர் அடித்து வருகிறார். கருத்தம்மா, நேசம், உல்லாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மகேஸ்வரியை நினைவு இருக்கா? அவரும் மீனா மற்றும் சிம்ரனுடன் கோவா டூரில் பங்கேற்றுள்ளார். 2000ம் ஆண்டுக்குப் பிறகு 25 ஆண்டுகளாக சினிமாவில் அவர் நடிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மாளவிகா, சங்கீதா உள்ளிட்டோரும் இந்த ரீ யூனியன் டூரில் ஐக்கியமாகி உள்ளனர்.
மோகன்ராஜா முதல் ஷங்கர் வரை: இதில், ஆச்சர்யமளிக்கும் விஷயம் என்றால் பிரபுதேவா, ஷங்கர், கே.எஸ். ரவிகுமார், லிங்குசாமி மற்றும் நம்ம ரவி மோகன் அண்ணா இயக்குநர் மோகன் ராஜாவும் கோவா டூரில் நடிகைகளுடன் இணைந்து சென்றிருப்பது தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெப்சீரிஸ் எடுக்கலாம்: இந்த கூட்டணியை வைத்து ஒரு வெப்சீரிஸ் எடுத்தால் நெட்பிளிக்ஸ், அமேசான் என ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி விடுவார்கள் என்றும் வாழ்க்கையை என்னம்மா ஜாலியாக என்ஜாய் பண்றாங்க. அந்த காலத்தில் ஏகப்பட்ட நட்சத்திர கொண்டாட்டங்கள் எல்லாம் நடக்கும். ஆனால், சமீப காலமாக அதெல்லாம் இல்லாமலே போய் விட்டது. படங்களில் நடிக்கும் நடிகர்களுடன் கூட மற்ற நடிகர்கள் முகம் கொடுத்து பேசுவது கிடையாது என்றும் ஆரோக்கியமான பார்ட்டிகளை தாண்டி ஆபத்தான போதைப் பார்ட்டிகள் தான் சமீப காலமாக அதிகரித்து வருவதாக ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











