'பால்யகால சகி'... மம்முட்டிக்கு அம்மா ஆன மீனா!

By Shankar

சென்னை: திருமணத்துக்குப் பிறகு ஓரிரு தெலுங்குப் படங்கள் மற்றும் டிவி ஷோக்களில் பங்கேற்று வந்த நடிகை மீனா, முழு வீச்சில் களமிறங்குகிறார்.

அடுத்தடுத்து மலையாளப் படங்களில் இளம் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.

நெஞ்சங்கள்

நெஞ்சங்கள்

எண்பதுகளில் வெளியான நடிகர் திலகம் சிவாஜியின் நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் மீனா. ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்தில் நடித்தார்.

ஹீரோயின்

ஹீரோயின்

'சீதா ராமையா காரி மனவரலு' என்ற தெலுங்கு படத்தில்தான் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார் மீனா. பின்னர் தமிழில் ஒரு புதிய கதை எனும் படத்தில் நாயகியாக நடித்தார். என் ராசாவின் மனசுல படம்தான் இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

எஜமான்

எஜமான்

தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாக எஜமான் படத்தில் நடித்தார். படமும் இருவரின் ஜோடிப் பொருத்தமும் பெரிதாகப் பேசப்பட, ரஜினியுடன் தொடர்ந்து வீரா, முத்து போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார்.

கமலுடன்...

கமலுடன்...

கமலுக்கு ஜோடியாக அவர் நடித்த அவ்வை சண்முகி பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தெனாலியில் கவுரவ வேடத்தில் வந்தார்.

திருமணம்

திருமணம்

2009-ல் வித்யாசாகர் என்ற கம்ப்யூட்டர் எஞ்ஜினீயரை மணந்தார். குழந்தை பெற்றார். ஆனாலும் நடிப்புக்கு அவர் முழுக்குப் போடவில்லை. திருமணத்துக்குப் பிறகும் நடித்தார். தமிழில் தம்பிக்கோட்டை என்ற படத்திலும், தெலுங்கில் வெங்காம்பா என்ற படத்திலும் நடித்தார். கடைசியாக வெளியான 'ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கரர்' தெலுங்கு படத்தில் பார்வதி வேடம் ஏற்று நடித்தார்.

டிவி ஷோக்கள்

டிவி ஷோக்கள்

ஏற்கெனவே டிவி சீரியலில் நடித்த அனுபவம் உள்ள மீனா, தொடர்ந்து டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இப்போது முழுவீச்சில் மீண்டும் நடிக்கக் களமிறங்கியுள்ளார் மீனா.

மலையாளத்தில் மம்முட்டிக்கு...

மலையாளத்தில் மம்முட்டிக்கு...

இப்போது இரு மலையாளப் படங்களில் அம்மாவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மீனா. இதில் ஒரு படத்தில் மம்முட்டிக்கு அம்மாவாக நடிக்கிறார் மீனா என்பது குறிப்பிடத்தக்கது.

பால்யகால சகி

பால்யகால சகி

பிரபல மலையாள நாவலாசிரியர் வைக்கம் பஷீர் எழுதிய 'பால்யகால சகி' என்ற நாவல் அதே பெயரில் 1967ம் ஆண்டு மலையாளத்தில் திரைப்படமாக வெளிவந்தது.

பிரேம் நசீரும், ஷீலாவும் நடித்த அந்தப் படம் மீண்டும் அதே பெயரில் உருவாக்கப்படுகிறது. இதில் காதல் ஜோடியாக மம்முட்டியும், இஷா தல்வாரும் நடிக்கின்றனர். மம்முட்டியின் அம்மாவாக மீனா நடிக்கிறார்.

அடுத்து மோகன் லால் படத்திலும் அம்மா

அடுத்து மோகன் லால் படத்திலும் அம்மா

மோகன்லாலுடன் கடைசியாக 2005ல் வெளியான 'உடயநனு தாரம்' படத்தில் ஜோடியாக நடித்த மீனா, இப்போது மீண்டும் மோகன்லால் நடிக்கும் 'திரிஷ்யம்' படத்திலும் 2 குழந்தைகளின் பாசமான அம்மாவாக நடிக்கிறார்.

மம்முட்டி - மோகன்லால் இருவருக்குமே ஜோடியாக நடித்தவர் மீனா என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கும் அம்மாவாக நடிப்பாரா?

ரஜினிக்கும் அம்மாவாக நடிப்பாரா?

முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசி ரஜினி, மீனா என்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அடுத்து எனக்கு ஹீரோயினாக நடித்தார். யார் கண்டது... அடுத்து அவர் எனக்கு அம்மாவாகவும் நடிக்கக் கூடும்," என்றார்.

அது நிஜமாகிவிடும் போலிருக்கிறதே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X