மலையாளத்தில் கலக்கும் மீனா
ஒருகாலத்தில் உச்ச நடிகர்களுடன் மட்டுமே நடித்து உச்சத்தில் இருந்தவர் மீனா. தற்போது தமிழில் இவரது நிலை மிகவும் பரிதாபம்.சமீபத்தில் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான கண்ணம்மாவில் இவர் டி.வி. நடிகர் வெங்கட்டுக்கு ஜோடியாக நடித்தார்.
படம் வந்த வேகத்தில் பெட்டிக்குள் போய் விட்டது.
தற்போது மீனா கையில் இரண்டே இரண்டு தமிழ்ப் படங்கள் தான் உள்ளது. ஒன்று "தானம்". இந்தப்படத்தில் இவர் முரளியுடன் ஜோடிசேர்ந்துள்ளார்.
சுந்தரத்தெலுங்கில் 100 நாட்களை தாண்டி ஓடிய "கன்னிகாதானம் என்ற படத்தின் ரீமேக் தான் இது. ரவி. கே. சாமி என்பவர் படத்தைஇயக்குகிறார்.
வாலி பாடல்கள் எழுத யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் அப்பாஸ், மணிவண்ணன், செந்தில் உட்பட பலர் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு சென்னை, திருச்சி, மதுரை, கோவை, ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. மே மாதம் படம் திரைக்கு வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக "மானிடன் என்ற படத்தில் மீனா நடிக்கிறார். இதில் இவருக்கு ஜோடி ஜெய்சூர்யா. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.படத்தில் "சீனா தானா பாடலுக்கு ஆடுவாரே அதே ஜெயசூர்யாதான்.
கோலிவுட் கைவிட்டதால் கேரளாவுக்கு எஸ்கேப் ஆனார் மீனா. என்ன ஆச்சரியம்? அங்கு அவருக்கு சிவப்புக் கம்பளம் விரிக்காத குறைதான்.
மோகன்லாலுடன் இவர் நடித்த "நாட்டு ராஜா" என்ற படம் கன்னா பின்னாவென ஓட, அடுத்தடுத்து மோகன்லாலுடன் படங்கள் புக்கானது.
சமீபத்தில் வெளியான "உதயனானு தாரம் என்ற படமும் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மலையாளத்தில்மோகன்லால்-மீனா ஜோடி ராசியான ஜோடியாகி விட்டது. இப்போது படு உற்சாகத்தில் இருக்கிறார் மீனா.
அடுத்தடுத்து படங்கள் ஹிட்டாகி வருவதால் மோகன்லாலும் தனக்கு ஜோடியாக மீனாவையே புக் செய்யுமாறு சிபாரிசு செய்கிறாராம்.
இதற்கிடையே ரஜினியின் சந்திரமுகி படத்தில் ஒரு துண்டு வேடத்தில் நடிக்க மீனாவுக்கு வாய்ப்பு வந்தது. ரஜினியே கூப்பிடுகிறார் என்றுகூறியும் மீனா நடிக்க மறுத்து விட்டார்.
வாய்ப்புகளே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, துண்டு துக்கடா வேடங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கை முடிவில் மீனாஇருப்பதுதான் அவரது மறுப்புக்குக் காரணமாம்.


Click it and Unblock the Notifications











