மின்னல் வேகத்தில் படங்களை அள்ளும் மீனாட்சி சவுத்ரி.. பொறாமைப்படும் சக நடிகைகள்.. கிளம்பிய கிசுகிசு!
சென்னை: மீனாட்சி சவுத்ரியின் மின்னல் வேக வளர்ச்சி பிடிக்காமலே அவரை பற்றிய கிசுகிசுக்களை சில நடிகைகள் திட்டமிட்டு செய்வதாக அவரது காதுகளுக்கே தகவல்கள் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாகவே இளம் நடிகைகள் சினிமாவுக்கு வந்த புதிதில் அடுத்தடுத்த வாய்ப்புகளை எப்படி பிடிப்பது என்றே தெரியாமல் திணறிவிடுவார்கள்.
நடிகைகளின் நடிப்புத் திறமை மற்றும் அழகை பார்த்து ஹீரோக்களும், இயக்குநர்களும் நடிகைகளுக்கு வாய்ப்பைக் கொடுக்கும் போதே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் சில ஆண்டுகள் இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து தங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவது வழக்கம்.

ஆனால், அதுபோன்று எந்தவொரு விவகாரத்திலும் சிக்கிக் கொள்ளாமல் விவரமான ஆளாகவே வலம் வருகிறார் நம்ம கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி என அவரை பற்றி சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

யார் இந்த மீனாட்சி சவுத்ரி?: ஹரியானாவில் 1997ம் ஆண்டு பிறந்து வளர்ந்த மீனாட்சி சவுத்ரிக்கு தற்போது 27 வயதாகிறது. அப்பா ராணுவ வீரர். பல் மருத்துவம் படித்துவிட்டு மாடலிங் துறையில் ஆசை வந்துவிட்டது. 2017ம் ஆண்டு இந்தியன் மிலிட்டரி அகாடமி சார்பில் நடத்தப்பட்ட Miss IMA 2017ல் கலந்துக் கொண்டார். அதன் பின்னர் 2018ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் ரன்னர் ஆப் ஆன இவர், இந்தியில் 2019ம் ஆண்டு வெளியான அப் ஸ்டார்ட்ஸ் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். 2021ம் ஆண்டு தெலுங்கில் வெளியான Ichata Vahanamulu Niluparadu படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான மீனாட்சி சவுத்ரி, கில்லாடி, ஹிட் தி செகண்ட் கேஸ் என தொடர்ந்து தெலுங்கில் நடித்து வந்தார்.

மார்கெட்டை எகிற வைத்த கோட்: விஜய் ஆண்டனி தயவால் தமிழில் இவர் அறிமுகமானார். கொலை படத்தில் நடித்து கோலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த மீனாட்சி சவுத்ரி தொடர்ந்து சிங்கப்பூர் சலூன், கோட் என இரண்டு படங்களில் நடித்து மாஸ் காட்டியுள்ளார். பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்த நிலையில், தளபதி படமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

கைவசம் ஏகப்பட்ட படங்கள்: இந்த ஆண்டு மட்டும் மீனாட்சி சவுத்ரி நடிப்பில் குண்டூர் காரம், சிங்கப்பூர் சலூன், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், லக்கி பாஸ்கர் மற்றும் மட்கா உள்ளிட்ட படங்கள் இதுவரை வெளியாகி இருக்கின்றன. மேலும், மெக்கானிக் ராக்கி மற்றும் சங்கராந்தி வஸ்துன்னாம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சங்கராந்தி வஸ்துன்னாம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. அந்த படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சமீபத்தில், நடைபெற்ற படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி மேடையில் விளையாடிய காட்சிகள் படத்துக்கு நல்ல புரமோஷனாக அமைந்துள்ளது.
கடுப்பான நடிகைகள்: ராஷ்மிகா மந்தனா இப்படித்தான் மின்னல் வேகத்தில் கன்னடத்தில் இருந்து தெலுங்குக்கு வந்து கோலிவுட்டில் கால் வைத்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவே மாறிவிட்டார். அவரை தொடர்ந்து மீனாட்சி சவுத்ரியின் மின்னல் வேக வளர்ச்சி சில நடிகைகளுக்கு பிடிக்கவே இல்லையாம். குறிப்பாக ஒரு நடிகைக்கு சுத்தமாக ஆகவில்லை என்கின்றனர். அதன் காரணமாகவே திடீரென நாக சைதன்யாவின் உறவினருடன் அவருக்கு திருமணம் என்றெல்லாம் கிசுகிசு கிளம்ப காரணம் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











