GOAT சீக்ரெட் சொன்ன மீனாட்சி சௌத்ரி.. அய்யோ எவ்வளவு சந்தோஷம் பாருங்க
சென்னை: லியோ படத்தில் நடித்துக்கொண்டிஉக்கும்போதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார். அதனை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் படத்தில் நடித்திருக்கும் மீனாட்சி சௌத்ரி அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. '
தமிழ் சினிமாவில் அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் இப்போதைக்கு டாப்பில் இருப்பவர் விஜய். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தனது 25ஆவது படமாக இதனை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

GOAT ஸ்குவாட்: இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி அமரன், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறார். பல வருடங்கள் கழித்து டாப் ஸ்டார் பிரசாந்த் தமிழில் GOATபடத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். அதேபோல் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
போஸ்டர்கள்: படத்திலிருந்து இதுவரை மூன்று போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. புத்தாண்டையொட்டி இரண்டு போஸ்டர்களும், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒரு போஸ்டரும் வெளியாகின. பொங்கலுக்கு வெளியான போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோ கமாண்டோ உடையில் கையில் மெஷின் கன்னுடன் சிரித்துக்கொண்டிருக்கும்படி இருந்தார்கள். அது பெரும் வரவேற்பை பெற்றது.
ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு அடுத்ததாக தாய்லாந்து மற்றும் துருக்கிக்கு சென்றது படக்குழு. அங்கு வைத்து முக்கியமான காட்சிகள் மற்றும் ஆக்ஷன் சீக்வென்ஸுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் படத்தின் ஷூட்டிங் தற்போது இலங்கையில் நடைபெற்றுவருவதாக ஒரு தகவல் பரவலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மீனாட்சி சௌத்ரி: படத்தில் மீனாட்சி சௌத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். அவர் சமீபத்தில் படம் குறித்தும் விஜய் குறித்தும் அளித்த பேட்டியில், "விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எனது கனவு கோட் படத்தின் மூலம் நனவாகியிருக்கிறது. நான் எப்போதுமே அவரது தீவிரமான ரசிகை. விஜய்யுடன் ஸ்க்ரீனை பகிர்ந்துகொள்வது, அவருடன் காட்சிகளில் நடிப்பது என்பது ஒரு அற்புதமான அனுபவம். அவருடன் இணைந்து நடிக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் அவ்வளவு ரசித்துக்கொண்டிருக்கிறேன்" என்றார்.
ரிலீஸ் எப்போது: இதற்கிடையே GOAT படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவந்தாலும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் இப்போதே கேள்வி எழுப்பிவருகின்றனர். அதன்படி படத்தை பக்ரீத்துக்கு வெளியிட வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றிவிட்டதாகவும் அஜித் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்ஸைவிடவும் கோட் படத்தின் ப்ரீ பிஸ்னெஸ் அதிக அளவு நடந்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











