விஜயகாந்த்... ஒப்புக் கொண்ட மீனாட்சி தீட்சித்!

இந்நிலையில், படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான பாடல் காட்சிக்கு இங்குள்ள சில நடிகைகளைப் பரிசீலித்து அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
எவரிடமிருந்தும் முறையான பதில் வரவில்லையாம். ஆனால் மும்பையைச் சேர்ந்த விளம்பர மாடல் மீனாட்சி தீட்சித் நடிக்க ஒப்புக் கொள்ளவே, உடனே ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.
"இன்னும் ஒரு வாரத்துக்குள் கதாநாயகி பற்றிய அறிவிப்பு வெளியாகும். பெரும்பகுதி காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படும் 'விருதகிரி' படத்துக்காக இதுவரை இல்லாத அளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம். இந்தப் படத்தில் இடம்பெறும் விஜயகாந்தின் மேனரிஸம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும்", என்கிறார்கள் விருதகிரி படக் குழுவினர்.
ஆனால், படத்தின் கதையைப் பற்றி இப்போது எதுவும் சொல்லமாட்டார்களாம். அது சஸ்பென்ஸ் என்கிறார்கள் சீரியஸாக!
Comments


Click it and Unblock the Notifications