ஹீரோயினாக நடித்தாலும் குத்தாட்டத்திற்கும் ரெடியான மீனாட்சி

By Mayura Akilan

எதிர்பார்த்த அளவு நாயகி வாய்ப்பு வந்து குவியாததால் ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் என்றாலும் டபுள் ஓ.கே. சொல்லி வந்தார் நடிகை மீனாட்சி. இதனால் வந்த வாய்ப்பை நழுவ விடாமல் வெள்ளைக்கார துரையில் செம ஆட்டம் போட்டுள்ளாராம்.

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவா‌டை, தாவணியில் பாந்தமாய் வந்து அசத்திய மீனாட்சி, அதனைத்தொடர்ந்து நடித்த படங்களில் எல்லாம் கவர்ச்சி தாண்டவமாடி இருந்தார்.

அதுவும் ராஜாதிராஜாவில் லாரன்சுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தே படைத்திருந்தார். அகம் புறம் படத்திலும் மீனாட்சிக்கு, கிளாமர் கேரக்டர்தானாம்.

குத்துப்பாட்டுக்கு ரெடி

குத்துப்பாட்டுக்கு ரெடி

எதிர்பார்த்த அளவுக்கு நாயகி வாய்ப்பு கிடைக்காததால் சொந்த ஊரான கொல்கத்தாவுக்கே போன மீனாட்சி, அவ்வப்போது ஒருசில படங்களில் தலை காட்டினார். ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட வாய்ப்பு கிடைத்தால்கூட டபுள் ஓ.கே. என்று அவர் கூறவே கை மேல் பலன் கிடைத்தது.

வெள்ளைக்கார துரை

வெள்ளைக்கார துரை

தற்போது எழில் இயக்கி வரும் வெள்ளைக்கார துரை படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம்போட்டுள்ளார். விக்ரம் பிரபு நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கிளைமாக்ஸிற்கு முன்பு வரும் ஒரு குத்துப்பாடலுக்கு மீனாட்சி ஆடியுள்ளாராம்.

நேட்டிவிட்டி வேணுமே

நேட்டிவிட்டி வேணுமே

குத்துப்பாடலுக்கு நேட்டிவிட்டியான முகம் வேண்டும் என்பதால் மீனாட்சியை அணுகுகியதாக கூறியுள்ளார் எழில். அவரும் சந்தோசமாக ஒத்துக்கொண்டு ஆடி கொடுத்துள்ளார்.

வில்லங்கத்தில் ஹீரோயின்

வில்லங்கத்தில் ஹீரோயின்

குத்துப்பாடலுக்கு ஆடினாலும் வில்லங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மீனாட்சி. ஆனால் அந்த படம்தான் எப்போது ரிலீஸ் ஆகும் தெரியவில்லை.

குத்துப்பாடல் நாயகி

குத்துப்பாடல் நாயகி

மாடல் அழகியான பிங்கி சர்க்கார் கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் மீனாட்சியாக மாறினார். தொடர்ந்து விளம்பரப்படங்களில் நடித்த அவர், அகம் புறம், பெருமாள், ராஜாதி ராஜா, மந்திர புன்னகை ஆகிய படங்களில் நடித்தார். இப்போது குத்துப்பாடல் நாயகிகள் வரிசையில் இணைந்துள்ளார் மீனாட்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X