Thalapathy 68 Update - தளபதி 68 எப்படி இருக்கும்.. ஹீரோயின் மீனாட்சி சௌத்ரி சொன்ன செம அப்டேட்

சென்னை: Thalapathy 68 (தளபதி 68) தளபதி 68 படம் எப்படி இருக்கும் என்பது குறித்து நடிகை மீனாட்சி சௌத்ரி தெரிவித்திருக்கிறார்.

விஜய் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் லியோவில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனது 68ஆவது படத்திலும் கமிட்டானார். வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Meenakshui Chaudhary Talks about Thalapathy 68 Update

பூஜை: தளபதி 68 அறிவிப்பு வந்ததிலிருந்தே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. வெங்கட் பிரபு முதன்முறையாக விஜய்யுடன் இணைவதால் கண்டிப்பாக இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடையே இருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோ சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது.

மல்டி ஸ்டாரர்: இந்தப் படம் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகிறது. விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மைக் மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் பூஜை போட்ட கையோடு ஒரு பாடல் ஷூட்டிங் முடிக்கப்பட்டு பிறகு தாய்லாந்துக்கு பறந்தது படக்குழு. அங்கு வைத்து சில காட்சிகள் மற்றும் முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.

துருக்கி: தாய்லாந்து ஷெட்யூலை முடித்த படக்குழு சென்னை திரும்பி குட்டி ரெஸ்ட் ஒன்று எடுத்தது. அதனையடுத்து இப்போது படக்குழு துருக்கிக்கு சென்றிருக்கிறது. அங்கு வைத்தும் முக்கியமான காட்சிகள் எடுக்கப்படவிருக்கின்றன. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெங்கட் பிரபுவே புகைப்படத்தை பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மீனாட்சி சௌத்ரி: இந்நிலையில் தளபதி 68 குறித்து மீனாட்சி சௌத்ரி சொல்லியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் சிறந்த படைப்பு. கண்டிப்பாக இது தனித்துவமான ஒன்றாக இருக்கும்" என குறிப்பிட்டிருக்கிறார்.

டைம் ட்ராவல்: இந்தப் படம் என்ன மாதிரியான ஜானரில் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. அதுகுறித்து வெளியான லேட்டஸ்ட் தகவலில் தளபதி 68 டைம் ட்ராவல் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X