»   »  தங்கர் நாயகி மீனாள்!

தங்கர் நாயகி மீனாள்!

Subscribe to Oneindia Tamil

சேரனின் கண்டுபிடிப்பான மீனாள், தங்கர் பச்சானுக்கு ஜோடியாக பள்ளிக்கூடம்படத்தில் நடிக்கவுள்ளார்.

தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் அண்ணியாக வந்து கலக்கியவர் மீனாள்.பத்மப்ரியாவைப் போலவே மீனாளின் கேரக்டரும், அவரது நடிப்பும் பேசப்பட்டது.யார் இந்த கருப்பழகி என்று விழி உயர வைத்தார் மீனாள்.

தவமாய் தவமிருந்து படத்தில் நல்ல அறிமுகம் கிடைத்தும், பெயர் சொல்லும்அளவுக்கு மீனாளுக்கு படங்கள் கிடைக்கவில்லை. இடையில் கிடைத்த ஒருபடத்திலும் கூட கிளாமர் காட்டும் வகையிலான கேரக்டர் அமைந்தது. அந்தப் படத்தில்வரும் ஒரு பாடலில் படு கிளாமராக நடித்துள்ளார் மீனாள்.

இப்போது மீனாளுக்கு ஒரு அட்டகாசமான வாய்ப்பு வந்துள்ளது. அது தங்கரின்பள்ளிக்கூடம். இப்படத்தில் ஹீரோ நரேனுக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார் என்பதுபழைய செய்தி. பள்ளிக்கூட வாத்தியாரம்மாவாக இதில் நடிக்கிறார் சினேகா. இதற்காகநிஜமான டீச்சர்களைப் போய்ப் பார்த்து அவர்கள் பாடம் நடத்தும் முறை முதல் சேலைகட்டும் ஸ்டைல் வரை பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டு அதன்படி பிராக்டிஸ்செய்து வருகிறாராம்.

இயக்குநர் சீமானும் இப்படத்தில் நடிக்கிறார். அவருக்கும் ஜோடியை முடிவு செய்துவிட்டனர். இன்னொரு ஹீரோவான தங்கருக்குத்தான் சரியான ஜோடி ஆப்படாமல்இருந்து வந்தது. இப்போது அந்த நாயகியும் தகைந்து விட்டார்.

தங்கருக்கு ஜோடியாக மீனாளை ஒப்பந்தம் செய்துள்ளனராம். சேரன்தான் மீனாளைப்போடலாமே என்று பரிந்துரைத்தாராம். இதை தங்கரும் உடனே ஏற்றுக் கொண்டுவிட்டாராம்.

தங்கர் படத்தில் நடித்துத்தான் நவ்யா நாயருக்கு தமிழில் பெரிய பிரேக் கிடைத்தது.எனவே பள்ளிக்கூடம் தனக்கும் தமிழ் சினிமாவில் நிரந்தரப் புகலிடம் தரும் என்றநம்பிக்கையில் ஷூட்டிங் போக ஆவலாக உள்ளாராம் மீனாள்.

தங்கர் கை பட்டால் தங்கமாகாமல் போகுமா?

Read more about: meenal in pallikoodam
Please Wait while comments are loading...