»   »  அடங்கா மீனாள்!

அடங்கா மீனாள்!

Subscribe to Oneindia Tamil

தவமாய் தவமிருந்து படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்த மீனாள், சினிமாக்காரன்படத்தில் கட்டுக்கடங்காமல் திமிறியிருக்கிறாராம்.

தவமாய் தவமிருந்து, பத்மப்பிரியாவுக்கு மார்க்கெட்டைப் பிடித்துக் கொடுத்தது போலமீனாளுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் சிக்கவில்லை. ஆனாலும் அப்படியும்இப்படியுமாக மலையாளம், தெலுங்கில் சில படங்களில் தலையைக் காட்டி விட்டார்மீனாள்.

தமிழ், தெலுங்கில் இப்போது கை நிறையப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்மீனாள். இதில், பாண்டியராஜனுடன் நடிக்கும் படத்தில் மட்டுமே தனி ஹீரோயினாகநடிக்கிறார். மனசு பாலிக மெளனராகம் என்ற தெலுங்குப் படத்தில் 2வதுஹீரோயினாக நடித்துள்ளார்.

இதேபோல சூரிய கிரீடம் என்ற தெலுங்குப் படத்திலும் மீனாள் நடிக்கிறார்.லிங்குசாமியின் தயாரிப்பில் உருவாகும் தீபாவளி படத்தில், ஜெயம் ரவி- பாவனாகாதலை சேர்த்து வைக்கும் ஊறுகாய் கேரக்டரில் வருகிறாராம்.


இவை எல்லாவற்றையும் விட மீனாள் நடித்து வரும் சினிமாக்காரன் என்ற படம்தான்ஏகப்பட்ட சூட்டைக் கிளப்பி விட்டுள்ளது. காரணம், இதில் மீனாள், கிளாமரில் கில்லிஆடியிருப்பது தான்.

குறிப்பாக ஒரு பாடல் காட்சியில் மீனாள் காட்டியிலுக்கும் கிளாமர், இளசுகளைகன்னாபின்னாவென எகிற வைக்குமாம். அந்த அளவுக்கு தாளித்துத் தள்ளியுள்ளாராம்மீனாள்.


அந்தக் காட்சியின் ஸ்டில்களைப் பார்த்தாலே மனசுக்குள் பசக் பசக்கெனஅலையடிப்பதை உணர முடிகிறது.

ஒரு காட்சியில் மீனாளின் தொப்புளில் ஹீரோ எண்ணையை ஊற்றி சூடு பறக்கத்தேய்த்து விடுவது போல காட்சி வைத்துள்ளார்களாம். மீனாளுக்கு சூடு போகிறதோஇல்லையோ, பார்க்கும் ரசிகர்களுக்கு சூடு பிடிக்கப் போவது என்னமோ உறுதியோஉறுதி.


சூட்டிங் ஸ்பாட்டில் எக்கச்சக்கமாக நனைந்தபடி டான்ஸ் ஆடிவிட்டு வந்த மீனாவிடம்,கடைசியிலே நீங்களும் இப்படி கிளாமர் கடலில் குதித்து விட்டீர்களே என்றுகேட்டபோது,

நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்பதை ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லிவிட்டேன். எந்தச் சூழ்நிலையிலும் நான் அருவெறுக்க வைக்கும் அளவிலான கிளாமர்காட்ட மாட்டேன். அந்த நிலையில் இன்றும் மாற்றம் இல்லை. அப்படியேதான் அந்தகொள்கை உள்ளது.


தவமாய் தவமிருந்து படத்திற்குப் பிறகு நான் நிறைய மலையாள, தெலுங்குப்படங்களில் நடித்து விட்டேன். எதிலுமே நான் கிளாமர் செய்யவில்லை.சினிமாக்காரன் படத்தில் ஒரு நடிகை கேரக்டரில் நடிக்கிறேன்.

அப்படத்தில் வரும் இது நேசம் புதுசு, வாசம் புதுசு என்ற பாட்டுக்காக கொஞ்சம்கிளாமராக நடிக்கக் கூறினார்கள். அதில் அவர்கள் கொடுத்த டிரஸ் சற்றே கிளாமரானடிரஸ்தான். அதை நான் மறுக்கவில்லை. இருந்தாலும் அசிங்கமாக அக்காட்சிஇருக்காது.

இருந்தாலும் நான் கிளாமராக நடித்து விட்டதாக செய்தி பரவி விட்டதால், இதுபோன்றகாட்சியிலும் கூட இனிமேல் நடிக்காமல் தவிர்க்கப் போகிறேன் என்றார் மீனாள்.

Read more about: meenal in cinemakaran

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil