»   »  கோர்த்து விடும் மீனாள்

கோர்த்து விடும் மீனாள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரு கரு அழகி மீனாள், தட்டுத் தடுமாறி ஒரு வழியாக ஹீரோயினாகியுள்ளார்.அம்மணி ஹீரோயினாக நடிக்கும் சினிமாக்காரன் படத்தில் கிளாமரில் கிட்டிப்புல்ஆடியுள்ளார்.

சேரனின் செமத்தியான கண்டுபிடிப்புதான் மீனாள். நெடு நெடுவென, மாநிறஅழகியாக இருக்கும் மீனாள், தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் அத்தாச்சியாகநடித்தார்.

அப்படத்தில் பத்மப்பிரியாவைப் போலவே மீனாளின் நடிப்பும் பேசப்பட்டது.ஹீரோயினாக அறிமுகமாகாவிட்டாலும் கூட மீனாளுக்கு உள்ளே ஹீரோயின்கனவுதான் நிரம்பிக் கிடந்தது.

மீனாளின் உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொண்டு சரியான சமயத்தில் வந்துசேர்ந்ததுதான் சினிமாக்காரன். இதில் மீனாத்தாதான் ஹீரோயின். படு வித்தியாசமானகேரக்டராம் மீனாளுக்கு.

பிளாக்கில் சினிமா டிக்கெட் விற்கும் வில்லங்கமான பாத்திரம். பின்னிஎடுத்துள்ளாராம். சினிமா ஆசையுடன் கோலிவுட் பக்கம் உலவும் நான்கு பேருக்குமீனாள் உதவி செய்கிறாராம் இப்படத்தில்.

படத்தில் மீனாளைப் போடும் முன்பே கிளாமரும் தேவைப்படும் என்று கோடிட்டுக்காட்டி விட்டார்களாம். ஹீரோயினாக முதல் படமாச்சே, முத்திரை பதித்தால்தானேநல்லாருக்கும் என்று எண்ணிய மீனாளும், பரவாயில்லை, எடுத்துக்கோங்க என்றுகூறி விட அவர்களும் பதமாக கள் இறக்கி கலக்கி எடுத்திருக்கிறார்களாம்.

ஒரு பாடல் காட்சியில் மீனாளை வைத்து வெள்ளாடியிருக்கிறார்களாம். அதில் தனதுபம்பரத் தொப்புளையெல்லாம் காட்டி கிளுகிளுப்பூட்டியிருக்கிறாராம் மீனாள்.நீங்களும் கிளாமர் ரூட்தானா என்று மீனாளிடம் கேட்டால், அய்யோஅப்படியெல்லாம் இல்லீங்க. உண்மையைச் சொன்னால் எனக்கு கிளாமர் பிடிக்கவேபிடிக்காது.

முதல் படம் என்பதால் கொஞ்சம் கிளாமர் தேவை என்றார்கள். வேறு வழியில்லாமல்ஒத்துக் கொண்டேன். நல்ல கேரக்டர்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்.

இப்போ கூட எஸ்.ஜே.சூர்யாவோட வியாபாரி படத்தில் அவருக்கு தங்கச்சியாநடிக்கிறேன். அதில் எனது வேடம் பேசப்படும். மனதுக்குப் பிடித்த கேரக்டர் அது.சிறப்பாக செய்து வருகிறேன்.

அதேபோல தீபாவளி படத்திலும் எனக்கு வித்தியாசமான கேரக்டர்தான். இதில்ஜெயம் ரவி, பாவனாவை கோர்த்து விடும் கேரக்டர். அதாங்க, காதலுக்கு பாலமாகஅணில் கேரக்டரில் அசத்தியுள்ளேன். இரண்டிலுமே எனக்கு கிளாமர் கிடையாது.

இதேபோல தொடர்ந்து கிளாமர் கலக்காத நல்ல நல்ல கேரக்டர்களாக பார்த்துப் பார்த்துநடிப்பேன் என்கிறார் மீனாள்.

அக்காள் பேச்சு அசத்தல் போங்கோ...

Read more about: meenal becopmes heroine

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil