»   »  ஜில்.. காதலில் மீனாள் தவமாய் தவமிருந்து படத்தில் வாயாடி மருமகளாக நடித்த மீனாளுக்கு அடுத்தாக ஜோதிகா-சூர்யாவுடன்நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.திருப்பூர் பக்கம் டெக்ஸ்டைல் பிஸினசில் கொடி கட்டிப் பறக்கும் குடும்பம் மீனாளுடையது. வசதிக்குக்குறைவில்லாத குடும்பம். ஆனால், மீனாளுக்கோ சினிமா பைத்தியம் பிடித்துவிட, அவரை அதிலிருந்து மீட்கவீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்களாம்.ஆனால், ஒரே ஒரு படத்திலாவது நடிச்சுட்டு தான் கல்யாணம் பண்ணுவேன் என்று மீனாள் அடம் பிடிக்கவே,அவருக்கு சென்னையில் சினிமா புள்ளிகள் மூலம் வாய்ப்புத் தேடினார்கள். அப்படி வந்தது தான் சேரனின்தவமாய் தவமிருந்து பட வாய்ப்பு.அதில் நன்றாகவே நடித்து நல்ல பெயர் வாங்கினார் மீனாள். இதைத் தொடர்ந்தும் பட வாய்ப்புகளைஎதிர்பார்த்தவருக்கு உடனே ஏதும் வரவில்லை. இதனால் கல்யாணமா.. தொடர்ந்து சினிமாவா என்ற டைலமாவில்இருந்தார்.இந் நிலையில் தான் ஜோதிகாவிடம் இருந்து நள்ளிரவில் போன் வந்திருக்கிறது மீனாளுக்கு. நானும் சூர்யாவும்நடிக்கிற ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்கிறீங்களா என்று கேட்டிருக்கிறார்.சூர்யா படத்துலயா.. என்று வாய் பிளந்த மீனாள் நான் ரெடி என்று உடனே ஒப்புக் கொண்டாராம். இந்தப்படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடிக்கிறார். முதலில் இந்த ரோலில் நடிக்க ஆட்டோகிராப் மல்லிகாவைத் தான்கேட்டார்களாம்.அவர் அஜீத்தின் பரமசிவனில் பிஸி என்பதால் மீனாவை முடிவு செய்தார்களாம் ஜோதிகாவும் சூர்யாவும். இந்தப்படத்தைத் தயாரிப்பது சூர்யாவின் உறவுக்காரர் என்பது தான் தெரியுமே.மீனாளுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி தவிர செளராஷ்டிர மொழியும் தெரியுமாம். மீனாளின் சொந்த ஊர்மதுரையாம். இவரது குடும்பத்தினர் தொழில் செய்வது தான் திருப்பூரிலாம். மீனாளும் சும்மா இல்லைடெக்ஸ்டைல் என்ஜினியரிங் படித்திருக்கிறார்.இந் நிலையில் சினிமாவோடு அப்படியே தன் குடும்பத்து டெக்ஸடைல் பிசினஸை சென்னையிலும் விரிவாக்கத்திட்டமிட்டுள்ள மீனா, தானே அதை முன்னின்று நடத்தவும் போகிறாராம்.பரவாயில்லையே.. நல்ல தெறம இருக்கே..

ஜில்.. காதலில் மீனாள் தவமாய் தவமிருந்து படத்தில் வாயாடி மருமகளாக நடித்த மீனாளுக்கு அடுத்தாக ஜோதிகா-சூர்யாவுடன்நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.திருப்பூர் பக்கம் டெக்ஸ்டைல் பிஸினசில் கொடி கட்டிப் பறக்கும் குடும்பம் மீனாளுடையது. வசதிக்குக்குறைவில்லாத குடும்பம். ஆனால், மீனாளுக்கோ சினிமா பைத்தியம் பிடித்துவிட, அவரை அதிலிருந்து மீட்கவீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்களாம்.ஆனால், ஒரே ஒரு படத்திலாவது நடிச்சுட்டு தான் கல்யாணம் பண்ணுவேன் என்று மீனாள் அடம் பிடிக்கவே,அவருக்கு சென்னையில் சினிமா புள்ளிகள் மூலம் வாய்ப்புத் தேடினார்கள். அப்படி வந்தது தான் சேரனின்தவமாய் தவமிருந்து பட வாய்ப்பு.அதில் நன்றாகவே நடித்து நல்ல பெயர் வாங்கினார் மீனாள். இதைத் தொடர்ந்தும் பட வாய்ப்புகளைஎதிர்பார்த்தவருக்கு உடனே ஏதும் வரவில்லை. இதனால் கல்யாணமா.. தொடர்ந்து சினிமாவா என்ற டைலமாவில்இருந்தார்.இந் நிலையில் தான் ஜோதிகாவிடம் இருந்து நள்ளிரவில் போன் வந்திருக்கிறது மீனாளுக்கு. நானும் சூர்யாவும்நடிக்கிற ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்கிறீங்களா என்று கேட்டிருக்கிறார்.சூர்யா படத்துலயா.. என்று வாய் பிளந்த மீனாள் நான் ரெடி என்று உடனே ஒப்புக் கொண்டாராம். இந்தப்படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடிக்கிறார். முதலில் இந்த ரோலில் நடிக்க ஆட்டோகிராப் மல்லிகாவைத் தான்கேட்டார்களாம்.அவர் அஜீத்தின் பரமசிவனில் பிஸி என்பதால் மீனாவை முடிவு செய்தார்களாம் ஜோதிகாவும் சூர்யாவும். இந்தப்படத்தைத் தயாரிப்பது சூர்யாவின் உறவுக்காரர் என்பது தான் தெரியுமே.மீனாளுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி தவிர செளராஷ்டிர மொழியும் தெரியுமாம். மீனாளின் சொந்த ஊர்மதுரையாம். இவரது குடும்பத்தினர் தொழில் செய்வது தான் திருப்பூரிலாம். மீனாளும் சும்மா இல்லைடெக்ஸ்டைல் என்ஜினியரிங் படித்திருக்கிறார்.இந் நிலையில் சினிமாவோடு அப்படியே தன் குடும்பத்து டெக்ஸடைல் பிசினஸை சென்னையிலும் விரிவாக்கத்திட்டமிட்டுள்ள மீனா, தானே அதை முன்னின்று நடத்தவும் போகிறாராம்.பரவாயில்லையே.. நல்ல தெறம இருக்கே..

Subscribe to Oneindia Tamil

தவமாய் தவமிருந்து படத்தில் வாயாடி மருமகளாக நடித்த மீனாளுக்கு அடுத்தாக ஜோதிகா-சூர்யாவுடன்நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

திருப்பூர் பக்கம் டெக்ஸ்டைல் பிஸினசில் கொடி கட்டிப் பறக்கும் குடும்பம் மீனாளுடையது. வசதிக்குக்குறைவில்லாத குடும்பம். ஆனால், மீனாளுக்கோ சினிமா பைத்தியம் பிடித்துவிட, அவரை அதிலிருந்து மீட்கவீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்களாம்.

ஆனால், ஒரே ஒரு படத்திலாவது நடிச்சுட்டு தான் கல்யாணம் பண்ணுவேன் என்று மீனாள் அடம் பிடிக்கவே,அவருக்கு சென்னையில் சினிமா புள்ளிகள் மூலம் வாய்ப்புத் தேடினார்கள். அப்படி வந்தது தான் சேரனின்தவமாய் தவமிருந்து பட வாய்ப்பு.

அதில் நன்றாகவே நடித்து நல்ல பெயர் வாங்கினார் மீனாள். இதைத் தொடர்ந்தும் பட வாய்ப்புகளைஎதிர்பார்த்தவருக்கு உடனே ஏதும் வரவில்லை. இதனால் கல்யாணமா.. தொடர்ந்து சினிமாவா என்ற டைலமாவில்இருந்தார்.


இந் நிலையில் தான் ஜோதிகாவிடம் இருந்து நள்ளிரவில் போன் வந்திருக்கிறது மீனாளுக்கு. நானும் சூர்யாவும்நடிக்கிற ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்கிறீங்களா என்று கேட்டிருக்கிறார்.

சூர்யா படத்துலயா.. என்று வாய் பிளந்த மீனாள் நான் ரெடி என்று உடனே ஒப்புக் கொண்டாராம். இந்தப்படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடிக்கிறார். முதலில் இந்த ரோலில் நடிக்க ஆட்டோகிராப் மல்லிகாவைத் தான்கேட்டார்களாம்.

அவர் அஜீத்தின் பரமசிவனில் பிஸி என்பதால் மீனாவை முடிவு செய்தார்களாம் ஜோதிகாவும் சூர்யாவும். இந்தப்படத்தைத் தயாரிப்பது சூர்யாவின் உறவுக்காரர் என்பது தான் தெரியுமே.

மீனாளுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி தவிர செளராஷ்டிர மொழியும் தெரியுமாம். மீனாளின் சொந்த ஊர்மதுரையாம். இவரது குடும்பத்தினர் தொழில் செய்வது தான் திருப்பூரிலாம். மீனாளும் சும்மா இல்லைடெக்ஸ்டைல் என்ஜினியரிங் படித்திருக்கிறார்.


இந் நிலையில் சினிமாவோடு அப்படியே தன் குடும்பத்து டெக்ஸடைல் பிசினஸை சென்னையிலும் விரிவாக்கத்திட்டமிட்டுள்ள மீனா, தானே அதை முன்னின்று நடத்தவும் போகிறாராம்.

பரவாயில்லையே.. நல்ல தெறம இருக்கே..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil