Meena: நான் அசிங்கப்பட்டேன்.. அவமானப்பட்டேன்.. மீனா பகிர்ந்த வீடியோ.. சினேகாவின் ரியாக்‌ஷன்

சென்னை: நடிகை மீனா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர். படப்பிடிப்பு அப்டேட்கள், குடும்ப தருணங்கள் மட்டுமின்றி, ரசிகர்களை சிரிக்க வைக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அதிலும் இவரது போட்டோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து கொண்டே உள்ளது. பலரும் அவரது சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்து, மீனா கதாநாயகியாக இன்னொரு ரவுண்டு வரலாம் போலயே என்று பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. அதேபோல் அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு நகைச்சுவை ரீல்ஸ் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில் நடிகர் வடிவேலு மற்றும் பாவா லட்சுமணன் இணைந்து நடித்த பிரபல காமெடி காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. "நான் அசிங்கப்பட்டேன்... அவமானப்பட்டேன்... வெட்கப்பட்டேன்... வேதனைப்பட்டேன்... துக்கப்பட்டேன்... துயரப்பட்டேன்... கஷ்டப்பட்டேன்... கவலைப்பட்டேன்..." என்று வடிவேலு சொல்லும் வசனத்திற்கு நடிகை மீனா முகபாவனையுடன் நடித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, "இவ்வளவு பட்டும் நீங்க திருந்தலையே பாஸ்!" என்று பாவா லட்சுமணன் பேசும் வசனத்திற்கு நடிகை மகேஷ்வரி லிப் சிங்க் செய்திருப்பது வீடியோவின் ஹைலைட்டாக அமைந்துள்ளது. இருவரின் எக்ஸ்பிரஷன்களும் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளன.

Actress Meena s funny Instagram reel featuring Vadivelu s iconic comedy dialogue has gone viral

இந்த ரீல்ஸை பகிர்ந்துள்ள மீனா, "இரண்டு நண்பர்களுக்கு அளவுக்கு அதிகமான ஃப்ரீ டைம் இருந்தால்... அதாவது வேலை வெட்டி இல்லாமல் இருந்தால் இப்படித்தான் இருக்கும்!" என்று கலகலப்பாக கேப்ஷன் பதிவிட்டுள்ளார். அந்த ஒரு வரியே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சினேகா ரியாக்‌ஷன்: வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும், ஏராளமான கமெண்ட்களையும் குவித்துள்ளது. "இந்த காம்போ செம்ம", "வடிவேலு டயலாக் இன்னும் எவர்கிரீன்", "மீனா மற்றும் மகேஷ்வரியின் ரீல்ஸ் செம க்யூட்" என்று ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இவரது இந்த ரீல்ஸ் வீடியோவுக்கு நடிகை சினோகாவோ சிரிப்பது போல எமோஜி பகிர்ந்து கமெண்ட் செய்துள்ளார்.

திரிஷ்யம் 3: தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நடிகையாக இருக்கும் மீனா, சமூக வலைதளங்களிலும் ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதால், அவர் பகிரும் இதுபோன்ற ஜாலியான பதிவுகள் வெளியாகும் போதெல்லாம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மீனாவின் நடிப்பில் கடைசியாக திரிஷ்யம் 3 படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாகவும் மாறியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X