»   »  நான் லூசா-மீரா டென்ஷன்

நான் லூசா-மீரா டென்ஷன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் தொடர்ந்து வெகுளித்தனமான, அரைவேக்காட்டுப் பெண் போன்ற கேரகடர்களையே கொடுத்து என்னை லூசுப் பெண்ணாக்கி விட்டார்களே என்று புலம்புகிறாராம் மீரா ஜாஸ்மின்.

மலையாளத்தில் அவ்வப்போது நடித்தாலும் கூட தொடர்ந்து தமிழில் நடிக்க படு தீவிரமாகவும், ஆர்வமாகவும் உள்ளார் மீரா ஜாஸ்மின். அதிலும் திருமகன் படத்தில் தனது நடிப்பு பலரையும் கவர்ந்து விட்டதால், அவரது தமிழ்ப் பட ஆர்வம் பன்மடங்கு பெருகியுள்ளதாம்.

இருந்தாலும் மீராவுக்குள் ஒரு கோபம் கலந்த ஆதங்கம் அதிகமாகவே இருக்கிறதாம். அதாவது, தனக்கு வெகுளித்தனமான, விளையாட்டுத்தனம் மிக்க, அரைவேக்காட்டுத்தனமான ரோல்களாகவே வருவதாக புலம்புகிறார் மீரா.

என்னைப் பார்த்தால் லூசு மாதிரியா தெரிகிறது. ஏன் அப்படிப்பட்ட கேரக்டர்களாகவே எனக்குக் கொடுக்கிறார்கள் என நெருங்கியவர்களிடம் புலம்புகிறாராம் மீரா. புதிய கீதை(விஜய் படம்)படத்தில் எனது கேரக்டரை கிட்டத்தட்ட லூசுத்தனமாகவே மாற்றியிருந்தனர். பின்னர் வந்த படங்களிலும் அதுபோலவே கேரக்டரை அமைத்தனர்.

பரட்டை என்கிற அழகுசுந்தரத்திலும் கூட கிட்டத்தட்ட வெகுளிப் பெண் வேடம்தான். எனக்கே அலுத்து விட்டது இப்படிப்பட்ட கேரக்டர்களில் நடித்து என்று அலுத்துக் கொள்கிறாராம் மீரா.

இப்போது பரட்டையும் அத்து விட்டு விட்டதால் மீராவின் நிலைமை சோகமாகியுள்ளதாம். இருந்தாலும் தொடர்ந்து தமிழில்தான் அதிக கவனம் செலுத்தப் போகிறாராம் மீரா.

மீரா, கவலையை மறந்து நடிங்க ஜோரா

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more