Balakrishna did not hit Ravitheja, says Meera Jasmine
பி.வாசு இயக்கத்தில் பாலய்யா என்ற படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மீரா. இந்தப்படத்தின் சூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.
அப்போது மீராவிடம் பேசிய ரவிதேஜா, பாலகிருஷ்ணா அந்த விஷயத்தில் ரொம்ப மோசம். அவர் ஒருநடிகையை விரும்பி விட்டால், கிடைக்கும் வரை விட மாட்டார். எனவே ரொம்ப உஷாராக இருங்கள், முடிந்தால்படத்திலிருந்து விலகி விடுவது பெட்டர் என்று கூறியதாக தெரிகிறது.
இந்த மேட்டரை பாலகிருஷ்ணாவுக்குப் போனது. கடுப்பான பாலகிருஷ்ணா, ரவிதேஜாவை சென்னைக்குவரவழைத்தார். ஹோட்டலில் பாலகிருஷ்ணாவை சந்தித்த ரவி தேஜா, என்ன விஷயம் என்று கேட்டதுதான்தாமதம். எழுந்து சரமாரியாக அடித்துத் துவைத்து விட்டாராம் பாலகிருஷ்ணா. அவர் போட்ட அடியைத் தாங்கமுடியாமல் தத்தளித்த ரவிதேஜா, ஒரு வழியாக அவரிடமிருந்து தப்பி ஹைதராபாத்துக்கு ஓடியுள்ளார்.
இந்த சம்பவம் ஆந்திரத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல மீரா ஜாஸ்மினையும்இந்த செய்தி கலக்கி எடுத்துள்ளது. இவரால் தான் அடிதடி சம்பவமே நடந்தது என்பதால் அச்சத்தில் உள்ளார்மீரா.
நான் படப்பிடிப்புக்கு வந்து செல்வதோடு சரி, மற்ற யாரைப் பற்றியும் நான் யாரிடம் சொல்லாத போது, இப்படிஒரு சம்பவம் நடக்காத போது, எப்படி இப்படிச் செய்தி பரவியது என்று தெரியவில்லை என்றார் மீரா ஜாஸ்மின்.
ஆனால் அடி வாங்கிய ரவி தேஜாவும், அடித்த பாலகிருஷ்ணாவும் இச்செய்தியை இதுவரை மறுக்கவில்லை.எனவே அடி விழுந்தது உண்மைதான் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications