»   »  டென்ஷன் நாயகிகள்

டென்ஷன் நாயகிகள்

Subscribe to Oneindia Tamil

மலையாளத்திலிருந்து தமிழுக்குப் போய் மறுபடியும் தாயகம் திரும்பியுள்ள சில நடிகைகளால் மலையாள படதயாரிப்பாளர்கள் டென்ஷனாக உள்ளார்களாம்.

மலையாள நடிகைகள் பலர் தமிழில் வெளுத்து வாங்கி வந்தனர். சொற்ப படங்களிலேயே நடித்திருந்தாலும் கூடகேரளாவில் பல எஸ்டேட்கள், ஏக்கர்களை வளைத்துப் போடும் அளவுக்கு வளர்ந்து போனார்கள்.

வளர்ந்த பிறகு மறுபடியும் தாயகம் திரும்பி மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். மலையாளப்படங்களில் ஹீரோக்களுக்கே சில லட்சங்களைத்தான் சம்பளமாக கண்ணில் காட்டுவார்கள். ஹீரோயின்களுக்குஅதிலும் பாதிதான் தேறும்.

ஆனால் தமிழில் கதையே வேறு. எடுப்பும், மிடுக்குமாக இருக்கும் மலையாள நடிகைகளுக்கு தமிழ்சினிமாக்காரர்கள் ரெட் கார்பெட் விரித்து, அள்ளி அள்ளித் தருகிறார்கள். இதனால்தான் மலையாளத்தில்நடிப்பதை விட தமிழுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள் மலையாள நடிகைகள்.

இப்படி அள்ளோ அள்ளென்று அள்ளிய பிறகு தாயகம் திரும்பிய நடிகைகள், அங்கேயும் தமிழைப் போலவேவல்லிய சம்பளத்தை எதிர்பார்த்து டிமாண்ட் செய்கிறார்களாம்.

இது மட்டுமா நல்ல சம்பளத்துடன் தமிழ்ப் படம் ஏதாவது கிடைத்தால் ஒப்புக் கொண்டிருக்கிற மலையாளப்படத்தை அம்போவென்று விட்டு விட்டு ஓடி விடுகிறார்களாம்.

இப்படி டார்ச்சர் செய்யும் நடிகைகள் பட்டியலில் மீரா ஜாஸ்மின் முதலிடத்தைப் பிடித்துள்ளாராம். அவர்தற்போது ஒரு மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக போடப்பட்டவர்பிருத்விராஜ்.

ஆனால் தற்போது வினீத்தை நாயகனாக்கியிருக்கிறார்கள். எல்லாம் கூடி வந்த நேரமாக பார்த்து மீரா ஜாஸ்மின்ஷூட்டிங்குக்கு வராமல் டபாய்க்க ஆரம்பித்துள்ளார். இதனால் இயக்குனர் டென்ஷனாகி விட்டார்.என்னவென்று விசாரித்தபோதுதான் மேட்டர் கசிந்திருக்கிறது.

மீராவுக்கு புதிதாக 2 தமிழ்ப் படங்கள் கிடைத்திருக்கிறதாம். டப்பும் ஜாஸ்தியாம். இதனால்தான் நடிக்க ஒப்புக்கொண்ட மலையாளப் படத்திலிருந்து நிழுவ திட்டமிட்டாராம். அதனால்தான் ஷூட்டிங்குக்கு வராமல்இழுத்தடித்துள்ளார்.

விஷயத்தை தெரிந்து கொண்ட இயக்குனர் இப்போது மீராவை அம்மா (மலையாள நடிகர் சங்கம்) முன்புகொண்டு போய் நிறுத்த திட்டமிட்டுள்ளாராம்.

இந்த லிஸ்டில் கோபிகாவும் இடம் பிடிக்க ஆரம்பித்துள்ளாராம். ஆட்டோகிராப் மூலம் தமிழில் பிஸியாக நடிக்கஆரம்பித்த கோபிகா, இங்கே பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால் மலையாளத்துக்குத் தாவினார்.

இப்போது எம் மகனும், அரணும் சிறப்பாக ஓடுவதால் கோபிகாவைத் தேடி புதுப் படங்கள் வரத்தொடங்கியுள்ளதாம். முன்பை விட கூடுதல் சம்பளம் தருவதாக ஆசை காட்டுகிறார்களாம்.

இதனால் தம்மாத்தூண்டு சம்பளத்துக்கு ஒத்துக் கொண்ட மலையாளப் படங்களை கழற்றி விட்டு விடலாமா என்றுயோசிக்க ஆரம்பித்துள்ளாராம்.

பணம் பத்தாயிரமும் செய்யுங்காணும்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil