என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளினார்… பிரபல நடிகை பரபரப்பு புகார் !
மும்பை : நடிகை மீரா சோப்ரா, இன்டீரியர் டிசைனர் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பணத்தை வாங்கிக்கொண்டு தரமற்ற பொருட்களை பயன்படுத்தி என்னை ஏமாற்றியதாகவும், இதுகுறித்து கேட்டபோது என்னை என் வீட்டிலிருந்தே வெளியே தள்ளிமிரட்டியதாகவும் புகார் மனுவில் கூறியுள்ளார்.
இந்த புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்பே ஆருயிரே
எஸ்ஜே சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிலா. பார்ப்பதற்கு சிம்ரன் போல இருக்கும் இவருக்கு அன்பே ஆருயிரே திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுத்தந்தது. இதையடுத்து லீ, ஜாம்பவான், மருதமலை, ஜெகன்மோகினி, காளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்தியில் பிஸியாக
தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால், பாலிவுட் பக்கம் சென்ற நிலா தனது பெயரை மீரா சோப்ரா என மாற்றிக் கொண்டார். இதையடுத்து, தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

புதிய வீடு
இந்நிலையில், மீரா சோப்ரா மும்பை அந்தேரியில் பகுதியில் ஒரு புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார். அந்த வீட்டின் உள் அலங்கார பணிக்காக ராஜீந்தர் திவான் என்பவரிடம் 17 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். இதில் 8 லட்சத்தை முன் பணமாக கொடுத்துள்ளார்.

வெளியே தள்ளினார்
இதையடுத்து, படப்பிடிப்புக்காக பனாரஸி சென்ற மீரா சோப்ரா. படப்பிடிப்பு முடிந்து வந்து பார்த்த போது வீட்டில் உள்அலங்கார பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்ததாகவும். உடனே அனைத்தையும் மாற்றும் படி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது அவர், என்னை என் வீட்டில் இருந்தே வெளியே தள்ளிவிட்டு, இப்படிக் கேள்வி கேட்டால் வேலை செய்ய மாட்டேன் என மிரட்டியதாக கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு
இதுகுறித்து மும்பை காவல் நிலையத்தில் இன்டீரியர் டிசைனர் ராஜிந்தர் மீது மீரா சோப்ரா புகார் அளித்து உள்ளார். மீரா சோப்ரா ஏமாற்றப்பட்டது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்வருக்கு ட்வீட்
இந்த விவகாரம் குறித்து, தனது சமூகவலைத்தள பக்கத்தில், பெண் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், ஆனால் சட்டத்தை இயற்றுபவர்கள் சரியான நடவடிக்கை எடுப்பது இல்லை. தனியாக வாழும் பெண் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும் என கூறி மகாராஷ்டிரா முதமைச்சர் சஞ்சய் ரவுத்திற்கு ட்விட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











