நினைச்ச மாதிரி வீடு கிடைக்கிறதுக்குள்ள.. 2 வருஷமா தேடி இப்போ கிடைச்சாச்சு... ஹீரோயின் ஆஹா ஹேப்பி!

By

மும்பை: கடந்த இரண்டு வருடமாக தேடி இப்போதுதான் நினைத்த மாதிரியான வீட்டை வாங்கியுள்ளதாக பிரபல ஹீரோயின் கூறியுள்ளார்.

நடிகை நிலாவை ஞாபகமிருக்கிறதா? தனது, அன்பே ஆருயிரே படத்துக்காக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இறக்குமதி செய்திருந்தாரே, அவரேதான்.

அடுத்து, பிரசாந்தின் ஜாம்பவான், சிபிராஜின் லீ, அர்ஜூனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார்.

மீரா சோப்ரா

மீரா சோப்ரா

அப்படியே தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வந்த நிலா, பிறகு தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். இந்தியிலும் நடித்து வந்த இவர், இடையில் சிறிது காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் 'செக்‌ஷன் 375' என்ற இந்தி படம் வெளியாகி இருந்தது.

நாஸ்திக்

நாஸ்திக்

இப்போது அர்ஜூன் ராம்பால் ஜோடியாக நாஸ்திக் படத்தில் நடித்துள்ளார். சைலேஷ் வர்மா இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதில் ஹர்ஷாலி மல்கோத்ரா, திவ்யா தத்தா, ரவிகிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். அமிதாப்பச்சன் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இதையடுத்து வெப் சிரீஸில் நடிக்கிறார் மீரா சோப்ரா.

வாடகை வீடு

வாடகை வீடு

பிரபல நடிகைகள் பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா ஆகியோரின் உறவினரான இவர் மும்பையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதையடுத்து சொந்த வீடு தேடி வந்தார். கடந்த இரண்டு வருடமாகத் தேடி அலைந்த அவர், இப்போது ஒரு வீட்டை வாங்கியுள்ளார். சினிமாகாரர்கள் அதிகம் வசிக்கும், மும்பை லோகண்ட்வாலா பகுதியில் மூன்று பெட்ரூம் கொண்ட வீட்டை வாங்கியுள்ளார்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

இதுபற்றி அவர் கூறும்போது, 'நினைத்த மாதிரி வீடு அமைவது கஷ்டம் என்பதை வீடு தேடியபோது உணர்ந்துகொண்டேன். நல்ல ஏரியா, நல்ல பில்டிங், விசாலமான அறைகள் கொண்ட வீட்டை தேடினேன். இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இன்னும் இன்டீரியர் வேலைகள் இருக்கிறது. அதை நானே நேரடியாக இருந்து செய்ய இருக்கிறேன். எனக்கு பளிச்சென்ற வண்ணங்கள் பிடிக்கும். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து கிரியேட்டிவாக இன்டீரியரை அமைக்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X