'இங்க பார்யா, அர்த்தமுள்ள மவுனமாம்..அப்படின்னா? கேப்ஷனுக்கும் போட்டோவுக்கும் சம்மந்தமே இல்லையே?
மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள போட்டோவை ரசித்துள்ள ரசிகர்கள், அதன் கேப்ஷனுக்கும் போட்டோவுக்கும் சம்மந்தம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சிகளை எடுத்துவருகின்றன.
இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர்
எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
ஊரடங்கு விதிக்கப்பட்டும் இந்த வைரஸ் சில மாநிலங்களில் கட்டுக்குள் இல்லாததால், அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 43 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,147 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் திரைத்துறையினரும் வீடுகளில் இருந்து வருகின்றனர்.
இதனால், அவர்கள் வீட்டில் செய்யும் சமையல், ஒர்க் அவுட் போட்டோஸ் மற்றும் பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அர்த்தமுள்ள மவுனம்
நடிகை மீரா சோப்ராவும் தினமும் ஏதாவது ஒரு போட்டோ அல்லது டிக்டாக் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் இப்போது கிளாமர் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக,, 'அர்த்தமற்ற வார்த்தைகளை விட அர்த்தமுள்ள மவுனம் எப்போதும் சிறந்தது' என்று தத்துவமாகக் குறிப்பிட்டுள்ளார். சிலர் இந்த கேப்ஷனை ரசித்து பாராட்டியுள்ளனர்.

ஓவரான கிளாமர்
மவுனம் அதிகமாகவே பேசும் என்று சிலர் கூறியுள்ளனர். சில ரசிகர்கள், இது வழக்கத்தை விட ஓவரான கிளாமரா இருக்கே, ஏன் இப்படி? என்று கேட்டுள்ளனர். நாளுக்கு நாள் ரொம்ப அழகாயிட்டே போறீங்க? என்று சிலரும் இதே போல இன்னும் நிறைய போட்டோ போட்டுக்கிட்டே இருங்க, காத்திருக்கோம் என்று சிலரும் தெரிவித்துள்ளனர்.

ஹாட் மவுனம்
அர்த்தமுள்ள மவுனம்னா என்னான்னு தெரியல.. ஆனா, உங்க அழகு புரியுது என்று சிலர் கூறியுள்ளனர். இதுபோன்ற ஹாட் மவுனம் ரொம்ப சிக்கல் என்று சிலரும் இன்னும் சிலர் இந்த கேப்ஷனுக்கும் போட்டோவுக்கும் சம்மந்தமே இல்லையே என்றும் கூறியுள்ளனர். இன்னும் சிலர் அவர் அழகை ரசித்து எழுதியுள்ளனர்.

அன்பே ஆருயிரே
நடிகை மீரா சோப்ரா, தமிழில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, அன்பே ஆருயிரே படத்தில் நிலா என்ற பெயரில் அறிமுகமானவர். அடுத்து, பிரசாந்தின் ஜாம்பவான், சிபி ராஜின் லீ, அர்ஜூனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடித்து வந்த நிலா, பிறகு தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். சில காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











