எஸ்.ஜே. சூர்யா ஹீரோயினுக்கு கொலை மிரட்டல்.. அந்த மாஸ் ஹீரோவை தெரியாது என சொன்னதால் வந்த வம்பு

சென்னை: நடிகை மீரா சோப்ராவுக்கு பிரபல மாஸ் ஹீரோவின் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த அன்பே ஆருயிரே, அர்ஜுனின் மருதமலை படங்களில் நாயகியாக நடித்தவர் மீரா சோப்ரா.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரசிகர்களுடன் #AskMeera என்ற உரையாடல் நிகழ்ச்சியை நடத்திய போது தான் இந்த பிரச்சனை ஆரம்பித்துள்ளது.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

2005ம் ஆண்டு வெளியான எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. அந்த படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அர்ஜுனின் மருதமலை, பிரசாந்த் உடன் ஜாம்பவான், பரத்தின் கில்லாடி, சிபிராஜின் லீ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

யாருன்னே தெரியாது

யாருன்னே தெரியாது

கடைசியாக எஸ்.ஜே. சூர்யாவின் இசை படத்தில் ஒரு காட்சிக்கு தலை காட்டியிருந்த மீரா சோப்ரா, தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் #AskMeeraவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார் மீரா சோப்ரா. அப்போது ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் தங்கள் ஹீரோவை பற்றிய கேள்வியை எழுப்பினர் அதற்கு, அவர் யாரென்றே தெரியாது என்றும் தனக்கு மகேஷ் பாபுவைத் தான் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

பலாத்கார மிரட்டல்

பலாத்கார மிரட்டல்

ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆரை பிடிக்காது என நடிகை மீரா சோப்ரா வெளிப்படையாக சொன்ன நிலையில், அவரது ரசிகர்கள், மீரா சோப்ராவை ஆபாசமாக திட்டித் தீர்த்தனர். மேலும், அவரது குடும்பத்தையும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிய அவர்கள் எல்லை மீறி அவருக்கு பலாத்கார மிரட்டலையும் விடுத்துள்ளனர்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இதனால் கொதிந்தெழுந்த நடிகை மீரா சோப்ரா, நேரடியாக ஜூனியர் என்.டி.ஆருக்கே டிவிட்டரில் டேக் போட்டு, உங்களை பிடிக்காது என்று சொன்னதற்காக எனக்கு பலாத்கார மிரட்டல்களும் கொலை மிரட்டல்களும் வந்து குவிகின்றன. இப்படிப்பட்ட ரசிகர்களை வைத்திருப்பதில் நீங்கள் பெருமை கொள்கிறீர்களா என நேரடியாக கேட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

பெண்களுக்கு எச்சரிக்கை

பெண்களுக்கு எச்சரிக்கை

மேலும், பெண்களே நல்லா கேட்டுக்கோங்க, நீங்க ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகை இல்லை என்றால், நீங்கள் பலாத்காரம் செய்யப்படுவீர்கள், கூட்டு பலாத்காரம் செய்யப்படுவீர்கள் ஏன் கொலை செய்யக் கூட படுவீர்கள், இதை போன்ற கேவலமானவர்களால் அவர்களின் விருப்ப நடிகர்களுக்கு அவமானமே மிஞ்சும் என்றும் வெளுத்துள்ளார்.

கேஸ் போடுங்க

கேஸ் போடுங்க

மீரா சோப்ராவின் டிவீட்களை பார்த்த பாடகி சின்மயி, சமூக வலைதளங்களில் இதுபோன்ற பாலியல் தொல்லை கொடுக்கும் பல பேர் இருக்கின்றனர். ரசிகர்கள் என்ற போர்வையில் வரம்பு மீறி செல்லும் இவர்களை சும்மா விடாதீங்க, கேஸ் போடுங்க எனக் கூறியுள்ளார். அவரது கருத்தை ஆமோதித்து, ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் போர்வையில் தன்னிடம் ஆபாசமாக பேசிய சிலரை குறிப்பிட்டு மீரா சோப்ரா புகார் அளித்துள்ளார்.

Recommended Video

SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL
இவங்கள விடாதீங்க

இவங்கள விடாதீங்க

ஒரு மணி நேரத்திற்கு வெறும் 232 ரூபாய் கொடுத்தால் போதும், மீரா சோப்ரா வந்து விடுவார் என்றும், மீரா சோப்ராவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வோம் என்றும், அவரை கொலை செய்து விடுவேன் என்றும் தொடர்ந்து டிவீட் செய்த ஐடிக்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சைபர் கிரைமுக்கும் புகார் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X