யார் குழந்தைங்க இது..? இவ்ளோ க்யூட்டா பண்றாளே..? பிரபல ஹீரோயினுடன் வீடியோவில் அசத்தும் பாப்பா!

By

மும்பை: குழந்தை ஒன்றுடன் நடிகை மீரா சோப்ரா வெளியிட்டுள்ள வீடியோவை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.

Recommended Video

Soori and his kids ultimate Attrocity in Quarantine | Lock Down

தமிழில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, அன்பே ஆருயிரே படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர், நிலா.

அடுத்து, பிரசாந்தின் ஜாம்பவான், சிபி ராஜின் லீ, அர்ஜூனின் மருதமலை, கில்லாடி உட்பட பல படங்களில் நடித்தார்.

மீரா சோப்ரா

மீரா சோப்ரா

அப்படியே தெலுங்கிலும் நடித்து வந்த நிலா, பிறகு தனது ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். இந்திப் படங்களில் நடித்தார். இடையில் சிறிது காலம் அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் 'செக்‌ஷன் 375' என்ற படம் வெளியாகி இருந்தது.

வெப் சிரீஸில்

வெப் சிரீஸில்

இப்போது அர்ஜூன் ராம்பால் ஜோடியாக நாஸ்திக் படத்தில் நடித்துள்ளார். வெப் சிரீஸிலும் நடிக்கிறார். நடிகைகள் பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா ஆகியோரின் உறவினர் இவர். லாக் டவுன் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். படப்பிடிப்புகள் இல்லை என்பதால் நடிகர், நடிகைகளும் வீடுகளில் உள்ளனர்.

View this post on Instagram

With @kaina.chopra!

A post shared by Meera Chopra (@meerachopra) on

ஹாட் போட்டோ

லாக்டவுனில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை சில நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து வருகின்றனர். சிலர் ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதை ரசிகர்களும் லைக் செய்துவருகின்றனர். நடிகை மீரா சோப்ராவும் அடிக்கடி ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார்.

குழந்தையுடன்

குழந்தையுடன்

இப்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு குழந்தையுடன் ஒரு பாடலுக்கு இருவரும் ஒன்றாக ஆக்‌ஷன் செய்கின்றனர். இந்த வீடியோ க்யூட்டாக இருக்கிறது. இதை ரசிகர்கள் பலர் லைக் செய்துள்ளனர். சில ரசிகர்கள், இருவரில் யார் சிறப்பாக செய்கிறீர்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

View this post on Instagram

Nature and me!

A post shared by Meera Chopra (@meerachopra) on

அவ்வளவு க்யூட்

இன்னும் சிலர், யாருங்க இந்த குழந்தை? அவ்வளவு க்யூட்டா பண்றாளே? என்று ஆச்சரியமாகக் கேட்டுள்ளனர். 'ரெண்டு பேருமே சூப்பரா பண்றீங்க. வருங்காலத்துல அந்த குழந்தை பெரிய ஹீரோயினாக வர வாய்ப்பிருக்கு' என்று ஆருடம் கூறியுள்ளனர். இதற்கிடையே இயற்கையும் நானும் என்ற கேப்ஷனில் புதிய கிளாமர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா சோப்ரா.

அழகுக்கு முன்னால

அழகுக்கு முன்னால

இந்த போட்டோவையும் நெட்டிசன்ஸ் பலர் லைக் செய்துள்ளனர். 'நீங்க இயற்கைய விட அழகா இருக்கீங்க? உங்க அழகுக்கு முன்னால இயற்கை ஒன்னுமே இல்லை' என்று சிலர் தெரிவித்துள்ளனர். ஆஹா, இந்த போட்டோவை பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே என்று சிலரும் த்ரோபேக் படமா, செம? என்று சிலரும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X