அவர் ரொம்ப நல்லவர்.. ஆண் மட்டுமே தவறு செய்பவன் இல்ல.. ரவி மோகனுக்காக களமிறங்கிய மீரா சோப்ரா!
சென்னை: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், கண்ணீர் மல்க பேசியது பலரை வேதனையில் ஆழ்த்திய நிலையில் நடிகை மீரா சோப்ரா ரவி மோகனுக்கு ஆதரவாக பேசி உள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன்,தனது திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தேன். 14 ஆண்டுகளாக இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். உங்களால் அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ முடியுமா? எனக்கு தனியாக ஒரு வங்கி கணக்கு கூட இல்லை. வங்கியில் இருந்து நான் பணம் எடுத்தால்கூட உடனே தகவல் சென்று விடும். எதற்கு பணத்தை எடுத்தீங்க என நான் பதில் சொல்ல வேண்டும். இந்த கொடுமைகளை தாங்க முடியாமல் தான், நான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

ரவி மோகன்: சினிமாவிற்கு வந்து 23 வருஷமாகிறது இதுவரைக்கு எந்தவிதமான குற்றச்சாட்டும் என் மீது இல்லை. ஆனால், இப்போது பொண்ணு பின்னாடி போறான் என ஒரு கதைகட்டி விடுகிறார்கள். என் வேலையே அழகான நடிகைகள் கூட நடிப்பது தான். நான் பாக்காத அழகா, 45 வயதில் எப்படி அழகை தேடி போவார்கள். நடிகனாக இருப்பதால் இதை எல்லாம் நான் தாங்கிக்கொள்ள வேண்டுமா? என்னை உண்மையாக புரிந்து கொண்டது ஒரே ஒரு பெண் கெனிஷா. ஆனால், அந்த பெண்ணின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறி சைபர் புல்லியிங் செய்து அவரை அங்கிருந்து துரத்தி விட்டீங்க. தனது குழந்தைகளை கூட பார்க்க முடியவில்லை, பள்ளிக்கு சென்றாலும் அவர்களை சந்திக்க முடியல, இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு கூட முயன்றேன்.
மீரா சோப்ரா: எங்களுடைய வாழ்க்கையில் பிரச்சனை உருவாக காரணமே அந்த மூன்று எழுத்து இட்லி நடிகை தான் அவருக்கு என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் பேசுவதற்கு தகுதியே இல்லை என்று ரவி மோகன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசி இருந்தார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், நடிகை மீரா சோப்ரா ரவி மோகனுக்கு ஆதரவாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தவறு செய்பவன் ஆண் மட்டுமில்லை: அதில், "ரவி மோகனை எனக்கு நன்றாக தெரியும். நான் தென்னிந்திய சினிமாவில் நடித்த போது அவருடன் பணியாற்றி இருக்கிறேன். தற்போது தான் அவரது விவாகரத்து செய்தியை பார்த்தேன். எல்லா நேரத்திலும் தவறு செய்பவர் ஆண்கள் மட்டும் இல்லை. பெண்களுக்கு சாதகமாக இருக்கும் சட்டங்களை சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஒரு ஆணின் குரலும் கேட்கப்பட வேண்டும். ரவி மோகன் மிகவும் எளிமையான மற்றும் இனிமையான மனிதாராக நான் பார்த்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications