மீரா ஜாஸ்மினுக்கு ரூ 25 லட்சம் அபராதம்: நீதிமன்றம் அதிரடி

By Sudha

Meera Jasmine
மீண்டும் சர்ச்சையில் சிக்கி, நீதிமன்ற தண்டனைக்கும் உள்ளாகியுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின்.

கேரளாவில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம் ஆண்டுதோறும் நட்சத்திர கலைவிழா நடத்தி வருகிறது. மலையாள நடிகர்- நடிகைகளுக்கு பெரும் தொகை கொடுத்து கலை விழாவில் கலந்து கொள்ளச் செய்வது அவர்கள் வழக்கம்.

அதன்படி 5 ஆண்டுகளுக்கு முன் இந்த நிறுவனத்தின் கலைவிழாவுக்காக
மீரா ஜாஸ்மினை அழைத்திருந்தார் அதன் உரிமையாளர்.

இதற்காக அவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அட்வான்ஸ் தரப்பட்டது. ஆனால் அந்த விழாவில்மீரா ஜாஸ்மின் கலந்து கொள்ளவில்லை.

அட்வான்ஸ் தொகையை திருப்பித் தரும் வழக்கம் நடிகைகளிடம் பொதுவாகவே இல்லை என்பதால், மீரா ஜாஸ்மினும் கமுக்கமாக இருந்துவிட்டார்.

ஜவுளி நிறுவனம் சில முறை ஜாஸ்மினிடம் பேச முயன்றது. ஆனால் அவரோ போனையே எடுக்கவில்லையாம்.

இதையடுத்து ஜவுளி நிறுவனம் மீராஜாஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. 5 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு விசாரணையில் இப்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது.

ஜவுளி நிறுவனத்துக்கு மீராஜாஸ்மின் ரூ.25 லட்சம் அபராதமும், ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் தொகை யையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பைக் கேட்டு மிரண்டுபோன மீரா ஜாஸ்மின், சமாதானமாகப் போக வழியிருக்கிறதா என தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X