கிடைத்த ஒரே படமும் பறி போனது-மீரா ஜாஸ்மினுக்கு வந்த சோதனை!
சென்னை: மலையாள படத்தில் நடிக்க மீரா ஜாஸ்மினுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் மம்மூட்டி ஜோடியாக நடிக்க இருந்த பட வாய்ப்பும் பறிபோனது.
சண்ட கோழி', 'ரன்', 'ஆயுத எழுத்து' என பல்வேறு படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் சமீபகாலமாக அதிக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.
அஞ்சலி போலவே, 'குடும்பம் சொத்தை பிடுங்கியதாக கண்ணீர் விட்டு' கொஞ்ச காலத்தை ஓட்டிய மீராஜாஸ்மின் திடீரென காணாமல் போனார்.

அழகு புயல்...
மம்மூட்டி நடிக்கும் புதிய படம் ‘கேங்ஸ்டர்‘. ஆஷிக் அபு இயக்குகிறார். இதில் மம்மூட்டி ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளதாக தகவல் பரவியது.

’அம்மா’ கலைநிகழ்ச்சிக்கும் ஆட வரல...
சமீபத்தில் மலையாள சினிமா நடிகர் சங்கம் (அம்மா) நடத்திய கலைநிகழ்ச்சியில் நடனம் ஆட ஒப்புக்கொண்டிருந்தார் மீரா ஜாஸ்மின். இதில் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆனால் ஒத்திகைக்கு வராமலும், குறித்த நேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்காமலும் மீரா ஜாஸ்மின் நடந்துகொண்ட விதம் சங்கத்தினரை கோபத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அவரை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.

அக்னி நட்சத்திரங்கள்...
மீரா ஜாஸ்மின் மீது மற்ற நட்சத்திரங்களும் கோபமாக இருக்கிறார்கள். இதையடுத்தே மம்மூட்டியுடன் அவரை நடிக்க வைக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக தெரிகிறது.

வட... சாரி பட வாய்ப்பு பறி போனது...
இந்நிலையில் ‘கேங்ஸ்டர்‘ படத்தில் மம்மூட்டியுடன் மீரா நடிக்கவில்லை என்று இயக்குனர் ஆஷிக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்புறம் பாக்கலாம் ‘கேங்க்ஸ்டார’...
திரைக்கதை ஆசிரியரும், இயக்குனர் ஆஷிக்கின் நெருங்கிய நண்பருமான அபிலாஷ் குமார் கூறும்போது, ‘கேங்ஸ்டர் படத்தில் மீரா ஜாஸ்மின் நடிக்கவில்லை. தற்போது ‘இடுக்கி கோல்டு‘ என்ற படத்தில் ஆஷிக் கவனம் செலுத்தி வருகிறார். அப்படம் முடிந்த பிறகு கேங்ஸ்டர் பட பணிகளை தொடங்குவார்' என்றார்.


Click it and Unblock the Notifications











