மீண்டும் களமிறங்கும் மீரா ஜாஸ்மின்.. பிறந்தநாளுக்கு கொடுத்திருக்கும் சூப்பர் ட்ரீட்

சென்னை: நடிகை மீரா ஜாஸ்மின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் எண்ட்ரி ஆகிறார் மீரா ஜாஸ்மின்

கேராளவை பூர்வீகமாகக்கொண்டவர் மீரா ஜாஸ்மின். இவர் தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படம் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. அதுமட்டுமின்றி படத்தில் நடித்திருந்த மீரா ஜாஸ்மினின் நடிப்புக்கும் ரசிகர்கள் உருவாக தொடங்கினர்.

சண்டகோழியில் அசத்திய மீரா ஜாஸ்மின்

சண்டகோழியில் அசத்திய மீரா ஜாஸ்மின்

ரன் படத்துக்கு பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் மீரா ஜாஸ்மினுக்கு குவிந்தன. அவரும் பல படங்களில் நடித்தார். குறிப்பாக அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்தார். அவற்றில் முக்கியமான படம் சண்டகோழி. லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படத்தில் மீரா ஜாஸ்மினின் துறுதுறு நடிப்புக்கு பலர் ரசிகர்கள். சண்டகோழி 2 உருவானபோதுகூட மீரா ஜாஸ்மினை ரசிகர்கள் அதிகம் மிஸ் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் படத்தின் நாயகி

மணிரத்னம் படத்தின் நாயகி

இதனையடுத்து அவர் பல மொழிகளில் நடித்துக்கொண்டிருந்த மீரா ஜாஸ்மினுக்கு தமிழில் அடுத்த பிரேக் கொடுத்த படம் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து. அதில் மாதவனின் மனைவியாக நடிப்பில் அதகளம் செய்திருப்பார் மீரா ஜாஸ்மின். தொடர்ந்து மிகப்பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட மீரா கடைசியாக 2014ஆம் ஆண்டு வெளியான விஞ்ஞானி படத்தில் நடித்துவிட்டு தமிழ் திரையுலகிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

மீரா ஜாஸ்மினின் பிறந்தநாள்

மீரா ஜாஸ்மினின் பிறந்தநாள்

தமிழ் திரையுலகிலிருந்து ஒதுங்கினாலும் மலையாளத்தில் அவ்வப்போது நடித்துவந்தார். ஒருகட்டத்தில் அதிலிருந்தும் ஒதுங்க ஆரம்பித்தார். தற்போது மீரா ஜாஸ்மின் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். அதன்படி பல படங்களில் கமிட்டாகிவரும் மீரா ஜாஸ்மின் தனது புகைப்படங்களையும் அதிகம் பகிர்ந்துவருகிறார். இந்நிலையில் இன்று அவர் தனது பிறந்தநாளையும் கொண்டாடிவருகிறார்.

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய மீரா ஜாஸ்மின்

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய மீரா ஜாஸ்மின்

இந்தச் சூழலில் மீரா ஜாஸ்மினின் பிறந்தநாளான இன்று ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நீண்ட வருடங்களுக்கு பிறகு மீரா ஜாஸ்மின் தமிழில் நடிக்கவிருக்கிறார். தமிழில் அவர் ரீ எண்ட்ரி கொடுக்கும் படத்துக்கு விமானம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X