நடிகை மீரா ஜாஸ்மின் 2 நாளைக்கு முன் பதிவு திருமணம்! துபாய் இஞ்ஜினியரை மணந்தார்!

By Mayura Akilan

கொச்சி: நடிகை மீராஜாஸ்மின் கொச்சியில் உள்ள வீட்டில் துபாய் இஞ்ஜினியர் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை ரகசிய பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சார்பதிவாளர் அவரது வீட்டுக்கே சென்று திருமணத்தை சட்டப்படி பதிவு செய்தார்.

தமிழில் லிங்குசாமி இயக்கிய ரன்' படத்தில் அறிமுகமானவர் மீராஜாஸ்மின், 'சண்டக்கோழி' உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். கேரளாவைச் சேர்ந்த மீராஜாஸ்மின் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சமீபத்தில் இங்க என்ன சொல்லுது படத்தில் நடித்தார். தற்போது தமிழில் 'விஞ்ஞானி' என்ற படத்திலும், மலையாளத்தில் 'இதுக்கப்புறம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மாண்டலின் ராஜேசுடன்...

மாண்டலின் ராஜேசுடன்...

மீராஜாஸ்மினுக்கும், மாண்டலின் இசைக்கலைஞர் ராஜேசுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கள் வெளியானது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியானது. துபாய் இஞ்ஜினியர்.

இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் துபாயில் என்ஜினீயராக பணிபுரியும் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை நாளை (12ம் தேதி) திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இது பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் என்றும் கூறினார்.

ரகசிய பதிவு திருமணம்

ரகசிய பதிவு திருமணம்

கோவிலில் திருமணம் நடக்கும் முன்பே ஞாயிறன்று இரவு கொச்சியில் உள்ள மீராஜாஸ்மின் வீட்டில் அவருக்கும், அனில் ஜான் டைட்டசுக்கும் திடீரென ரகசிய பதிவு திருமணம் நடந்தது. இதற்காக சார்பதிவாளர் அவரது வீட்டுக்கே சென்று திருமணத்தை சட்டப்படி பதிவு செய்தார்.

நெருங்கிய உறவுகள்

நெருங்கிய உறவுகள்

இதற்காக கொண்டு வந்த புத்தகத்தில் மீரா ஜாஸ்மினும், அனில் ஜான் டைட்டசும் கையெழுத்திட்டனர். பின்னர் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். நிகழ்ச்சியில் இரு வீட்டைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 12ல் மீண்டும் திருமணம்

பிப்ரவரி 12ல் மீண்டும் திருமணம்

அனில் ஜான் டைட்டஸ்-மீராஜாஸ்மின் இருவரும் ரகசிய பதிவு திருமணம் செய்து கொண்டாலும் ஏற்கனவே அறிவித்தபடி இவர்களின் திருமணம் திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள எல்.எம்.எஸ். ஆலயத்தில் நாளை (12-ந் தேதி) காலை 11 மணிக்கு நடக்கும் என அவர்களின் நெருங்கிய உறவினர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு ஒரு மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் நடிப்பார்

சினிமாவில் நடிப்பார்

மீராஜாஸ்மினை திருமணம் செய்து கொண்ட அனில் ஜான் டைட்டஸ் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் டைட்டஸ் - சுகுதகுமாரி.அனில் ஜான் டைட்டஸ் சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். படித்தவர். தற்போது துபாயில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் மீராஜாஸ்மின் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X