எல்லாம் என் மேல உள்ள பொறாமைதான்.. பிக்பாஸ் சம்யுக்தாவுக்கு பதிலடி கொடுத்த சூப்பர் மாடல் மீரா மிதுன்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை நக்கலடித்த சீனியர் மாடல் சம்யுக்தாவுக்கு சர்ச்சை நடிகை மீரா மிதுன் பதிலடி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்றது.

இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் அனைவரும், தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

எவிக்ஷனுக்கு..

எவிக்ஷனுக்கு..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் குறித்து அறிந்து கொள்வதற்கும் அவர்கள் கடந்து வந்த பாதை குறித்து தெரிந்து கொள்வதற்கும் இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களின் அடிப்படையில் 8 பேர் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

ரொம்பவே உருக்கம்

ரொம்பவே உருக்கம்

அதாவது மற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் டச்சிங் ஸ்டோரிகளை கூறும் போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியானவர்கள் என கண்டிஷன் போட்டுள்ளார் பிக்பாஸ். இதனால் ரொம்பவே உருக்கமாக தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் பிக்பாஸ் போட்டியாளர்கள்.

மிஸ் சென்னை

மிஸ் சென்னை

அந்த வகையில் சீனியர் மாடலும் ஃபேஷன் டிசைனருமான சம்யுக்தா தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுவதற்கு முன்பாக தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டார். அப்போது, தான் 2007 மிஸ் சென்னை என்றும் பல விளம்பர படங்களில் நடித்துள்ளேன் என்றும் கூறினார்.

மீரா மிதுன்

மீரா மிதுன்

தொடர்ந்து பேசிய அவர், என்னை நான் சூப்பர் மாடல் என சொல்லிக் கொள்ள மாட்டேன் என கூறினார். அதனைக் கேட்ட அனைத்து போட்டியாளர்களும் கலகலவென சிரித்தனர்.
காரணம், கடந்த சீசன் பிக்பாஸ் போட்டியாளரான மீரா மிதுன் தன்னைத்தானே சூப்பர் மாடல் சூப்பர் மாடல் என கூறிக்கொண்டார்.

சம்யுக்தாவுக்கு பதிலடி

சம்யுக்தாவுக்கு பதிலடி

சமூக வலைதளங்களிலும் தன் புகழை பாடி வந்தார். இதனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக திட்டித்தீர்த்தனர். இந்நிலையில் சம்யுக்தா தன்னை கிண்டலடித்ததற்கு நடிகை மீரா மிதுன் சமூக வலைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

விருது கொடுத்த போது

விருது கொடுத்த போது

அதாவது தன் மீதுள்ள பொறாமையில்தான் சம்யுக்தா இப்படி பேசியிருப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் என்னிடம் நேரலையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, இங்கே பதில் சொல்கிறேன். நான் சம்யுக்தாவுக்கு "2015 ஆம் ஆண்டின் சிறந்த புன்னகை" என்று விருது வழங்கியபோது எடுத்த போட்டோ.

உண்மை அம்பலமானது

உண்மை அம்பலமானது

என்னை போன்ற ஒரு வெற்றிகரமான சூப்பர்மாடலைப் பார்த்து பொறாமைப்படுவது அவரைப் போன்ற ஒரு மாடலுக்கு உள்ளதுதான். சென்னை ட்ரென்ட், "மீரா மிதுனை" அவமதித்து கவனத்தைப் பெறுவது.. உண்மை அம்பலமானது. என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X