லவ் இங்கேதான் வளருது.. ஆண் நண்பருடன் ஊர் சுற்றும் சர்ச்சை நடிகை.. வீடியோவை வெளியிட்டு அட்டகாசம்!
சென்னை: நடிகை மீரா மிதுன் ஆண் நண்பர் ஒருவருடன் ஊர் சுற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை மீரா மிதுன் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் பிரபலமானார். குறிப்பாக இயக்குநர் சேரன் மீது அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு பிறகுதான் பெரும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து நடிகை மீரா மிதுனுக்கு இறங்கு முகம்தான். அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கினார். சர்ச்சை வீடியோக்கள் ஆடியோக்கள் என வெளியாகி மொத்த பெயரும் டேமேஜ் ஆனது.

கெட்ட ஆட்டம்
தொடர்ந்து அரைகுறை ஆடை ஆண் நண்பர்களுடன் பப்புகளில் கெட்ட ஆட்டம் என ஜாலியாக வாழ்க்கையை கொண்டாடி வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறிய மாப்பிள்ளை குறித்த அறிவிப்பை மட்டும் இதுவரை வெளியிடவில்லை.

படுக்கையறை
ஆனால் தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் படுக்கையறை, பப்பளிக் என ஆட்டம் ஆடும் மீரா மிதுன் தற்போது ஆண் ஒருவருடன் சுற்றும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

காதல் வளர்கிறது..
அதில் கண்ணடிப்பது, முத்தம் கொடுப்பது என அதகளப்படுத்தியிருக்கிறார் மீரா மிதுன். மேலும் காதல் இங்கேதான் வளர்கிறது என்றும் கேப்ஷன் கொடுத்திருக்கிறார் மீரா.

உங்கள் லவ்வரா?
அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இவர்தான் உங்கள் லவ்வரா? நாள்தோறும் ஒருவருடன் சுற்றுகிறீர்களே? என கேவலமாக கமென்ட் பதிவிட்டுள்ளனர்.
சுத்துறியா?
டெய்லி ஒவ்வொருத்தருக்கூட சுத்துறியா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











