தான் இறந்து போய் விட்டதாக கூறி.. தனக்குத்தானே ரிப் போட்ட மீரா மிதுன்.. திடீர் பரபரப்பு!

சென்னை: தான் இறந்துவிட்டதாக கூறி தனக்குத்தானே ரெஸ்ட் இன் பீஸ் என மீரா மிதுன் பதிவிட்டுள்ள டிவிட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மீரா மிதுன் என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது. வெள்ளித்திரை சின்னத்திரை என யாரையும் விட்டு வைக்காமல் விளாசி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் குறித்து தரக்குறைவாக பேசினார் மீரா மிதுன். அதோடு அவரது வீட்டு பெண்களையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்.

கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி

இதனால் கடுப்பான ரசிகர்கள் மீரா மிதுனை கடுமையாக விமர்சித்தனர். மீரா மிதுனின் டிவிட்டர் பக்கத்தில் கெட்ட கெட்ட வார்த்தையால் அவரை திட்டிய நெட்டிசன்கள், அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டினர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றி வீடியோ வெளியிட்டனர்.

நானும் விளையாடுவேன்

நானும் விளையாடுவேன்

ஆனாலும் அடங்காத மீரா மிதுன் அண்மையில் உலக நாயகன் கமல்ஹாசனை சாடி வீடியோ வெளியிட்டிருந்தார். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சேரனுக்காக தன்னை வெளியேற்றியது தவறு என்ற நடிகை மீரா மிதுன், நீங்கள் என் கேரியரில் விளையாடினால் நானும் உங்கள் கேரியரில் விளையாடுவேன் என்றார்.

கமலுக்கு மிரட்டல்

கமலுக்கு மிரட்டல்

அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த உங்களுக்கு தகுதி இல்லை என்றும் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை நீங்கள் நடத்த முடியாது என்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு சவால் விட்டதோடு மிரட்டியும் இருந்தார். மீரா மிதுனின் இந்த மிரட்டல் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விளாசியிருந்தனர்.

இறந்துவிட்டார் ரிப்

இறந்துவிட்டார் ரிப்

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு டிவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மீரா மிதுன் இறந்துவிட்டார், பிரேத பரிசோதனையும் விசாரணையும் தொடங்கிவிட்டது. ரெஸ்ட் இன் பீஸ் என தெரிவித்துள்ளார்.

Recommended Video

தமிழ் சினிமா இவரை ஏன் கொண்டாடவில்லை ? | vijayakanth | History Book Episode-01 | Filmibeat tamil
இது அந்தமாதிரி இருக்கு

இது அந்தமாதிரி இருக்கு

அந்த டிவிட்டர் பதிவு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதும் நெட்டிசன்கள் சிலர், ஒரு படத்தில் பிரகாஷ் ராஜ் இறந்தது போல் நடிப்பார். தான இறந்ததை யார் யார் கொண்டாடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதாக இருக்கும் அந்த காட்சியை நினைவுப்படுத்தி மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X