கனவுல கூட இப்படியா.. அந்த மாதிரி படமுன்னு நினைச்சிட்டோம்.. நடிகையை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: கனவில் ஆண் நண்பருடன் செக்ஸி டான்ஸ் ஆடுவதை போல வீடியோ வெளியிட்ட மீரா மிதுனை நெட்டிசன்ஸ் மரண பங்கம் செய்துள்ளனர்.
Recommended Video
நடிகை மீரா மிதுன் மக்கள் மத்தியில் பிரபலமானதே தனது நெகட்டிவ் ரீச்சை வைத்துதான். தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சில நிமிடங்கள் வந்து செல்லும் காட்சியில் நடித்திருந்தார்.
இருப்பினும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று தர்ஷனை காதலிப்பதாக கூறினார். அவர் மீராவின் காதலை ஏற்க மறுத்ததால் தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

கிளாமர் போஸ்
தொடர்ந்து இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். ஆனால் அந்த குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டதால் மக்களின் கோபத்திற்கு ஆளானார் மீரா மிதுன். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார் மீரா மிதுன். பட வாய்ப்புகள் கிடைக்காததால் அட்டை படங்களுக்கு கிளாமர் போஸ் கொடுத்து வருகிறார்.
View this post on InstagramQuarantine Dreams ❣️ To be Continued...
A post shared by Meera Mitun (@meeramitun) on
கழுவி ஊற்றி
அதோடு தனது ஆண் நண்பர்களுடன் அவ்வப்போது பப்புகளில் கெட்ட ஆட்டம் போட்ட வருகிறார். அரைகுறை ஆடையில் அவர் போடும் கெட்ட ஆட்டத்தின் வீடியோவை சமூக வலைதளங்களில் வீடியோவாகவும் வெளியிட்டு வந்தார். அதனை பார்த்து நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கழுவி ஊற்றினர்.

கனவு காண்பது போல்
ஆனாலும் மீரா மிதுன் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. தொடர்ந்து யாரையாவது விமர்சித்து வரும் மீரா மிதுன், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த .வீடியோ மீரா மிதுன் கனவு காண்பது போல் உள்ளது. ஹோட்டல் அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

செக்ஸி டான்ஸ்
அப்போது உள்ளே வரும் ஆண் நண்பர் டேப் ரெக்கார்டரை ஆன் செய்ததோடு, மீரா மிதுனை எழுப்பி டான்ஸ் ஆடுகிறார். பப்பில் ஆடும் அதே செக்ஸி டான்ஸைதான் ஆடுகிறார். டீப் ஓபன் நெக், தொடைக்கு மேல் வரை மட்டுமே உள்ள ட்ரான்ஸ்ப்ரன்ட் ஷார்ட் டாப்ஸை அணிந்திருக்கிறார் மீரா மிதுன்.
அலப்பறை தாங்க முடியல
இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மீரா மிதுன், குவாரண்டைன் ட்ரீம்ஸ் தொடரும் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ், அம்மா தாயே உன் அலப்பறை தாங்க முடியல என்று அலுத்துக் கொள்கின்றனர்.

பிட்டு படமா?
இதேபோல் இன்ஸ்டாகிராமிலும் தனது வீடியோவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். இதனை பார்த்த நெட்டிசன்கள், பார்ன் படம் என்று நினைத்துவிட்டோம் என கூறியுள்ளனர். இன்னும் சிலர் பிட்டு படமா என கேட்டும், அதிலேயும் நடிக்க ஆரம்பித்து விட்டீர்களா என்று கேட்டும் மரண பங்கம் செய்துள்ளனர்.

ஸ்பெல்லிங் தெரியல
உங்களுக்கு இதுபோன்ற கனவுகள் எல்லாமா வருகிறது என்றும் கேட்டு மரண கலாய் கலாய்த்துள்ளனர். மேலும் குவாரண்டைன் ஸ்பெல்லிங் கூட தெரியவில்லை என்றும் திட்டித்தீர்த்திருக்கின்றனர். மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்து புகழ்ந்தவர்களை காட்டிலும் திட்டியவர்களே அதிகமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











