அரசியலுக்கு அடிபோடுகிறாரா மீரா மிதுன்.. வைரலாகும் சீமானுடன் எடுத்த செல்ஃபி!
Recommended Video
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன் வைரலாக்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு தனக்கான ரசிகர்களை உருவாக்கி வருகிறார் மீரா மிதுன்.
மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட மீரா மிதுன், அரசியலிலும் அடியெடுத்து வைக்க திட்டமிட்டு வருகிறார்.
எதிர்பாராத சந்திப்பு
இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் மீரா மிதுன் எதிர்பாராமல் சந்தித்துள்ளார். அப்போது சீமானுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

அரசியல் என்ட்ரி
சீமானுடன் தனது எதிர்காலம் குறித்தும், அரசியல் குறித்தும் பேசினோம், நல்ல மனிதர் சீமான் என மீரா மிதுன் அந்த புகைப்படத்துடன் கேப்ஷனும் கொடுத்துள்ளார். அரசியலில் நுழையும் ஆர்வம் மீரா மிதுனுக்கு இருந்து வருவதால், அரசியல் என்ட்ரி விரைவில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விஜய்சேதுபதிக்கு வாழ்த்து
நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விஜய்சேதுபதிக்கும் மீரா மிதுன் தனது சமூக வலைதள பக்கத்தில் அவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.
இது எப்போ?
விஜய்சேதுபதியுடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மீரா மிதுனிடம் அவரது ரசிகர்கள் இது எப்போ என கமெண்ட் செய்து கேட்டு வருகின்றனர்.
பொங்கல் வாழ்த்து
பிங்க் நிற புடவையில் தலை நிறைய மல்லிகைப் பூ வைத்து பொங்கல் வாழ்த்துக் கூறிய மீரா மிதுன் வெளியிட்ட பதிவுக்கும் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











