செம வைப்ரேஷன் போல.. பிரேம்ஜியுடன் செல்ஃபி.. வைரலாகும் போட்டோ.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: தல அஜித்தின் பிறந்தநாளன்று, என்னை அறிந்தால் படத்தில் ஒரு ஓரமாக நின்று நடித்து இருந்த புகைப்படத்தை பதிவிட்டு, நடிகர் அஜித்தை மரியாதையின்றி பேசி விட்டார் என அஜித் ரசிகர்கள் மீரா மிதுனை வறுத்தெடுத்தனர்.

Recommended Video

Actress Meera mithun shares pub dance video on her social page

இந்நிலையில், பழையபடியே பிரபலங்களுடன் சில பார்ட்டிகளில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்துள்ளார் மீரா மிதுன்.

கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிடுவது மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் வாய்க்கு வந்தபடி உளறி கொட்டும் மீரா மிதுனை நெட்டிசன்கள் தொடர்ந்து எச்சரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மாடல் அழகி

மாடல் அழகி

தான் ஒரு சூப்பர் மாடல் என அவரே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அளவுக்கான மாடல் அழகி தான் மீரா மிதுன். என்னை அறிந்தால், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் சைடு ரோலில் ஒரு ஓரமாக நின்று நடித்திருப்பார். பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பல சர்ச்சைகளை கிளப்பி தானும் ஒரு பிரபலம் என நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்ற ரேஞ்சுக்கு மாறியுள்ளார்.

மொத்தத்தையும் காட்டி

மொத்தத்தையும் காட்டி

ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மீரா மிதுன், நாள் தோறும் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, தனது முன்னழகு, பின்னழகு, தொடையழகு என மொத்தத்தையும் கடை விரித்துக் காட்டி வைரலாக்கி வருகிறார். ஆனால், அவருக்கு லைக்குகள் குவிகிறதோ இல்லையோ ட்ரோல்கள் தாராளமாக குவிகிறது.

வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்

படு ஆபாசமாக புகைப்படங்களை பதிவிட்டு வரும் பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுனை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்தும், கமெண்ட்டுகளில் வச்சு செய்தும் வருகின்றனர். இன்னும் சில பேர், பச்சை பச்சையாகத் திட்டியும், திருநங்கை என்று உச்சகட்டமாக ட்ரோல் செய்தும் வருவதை பார்த்து டென்ஷனான மீரா மிதுன் அது குறித்து பல முறை புகாரும் அளித்துள்ளார்.

அரசியல் சர்ச்சை

அரசியல் சர்ச்சை

கிளாமராக போஸ் காட்டுவது மட்டுமின்றி, சமீப காலமாக அரசியல் சிந்தனை உடையவராக பரபரப்பான கருத்துக்களையும், சர்ச்சையான பதிவுகளையும் போட்டு வருகிறார். உங்களுக்கு போதை அதிகம் ஆகிடுச்சு என்றும் லூசாகிட்டீங்களா, இப்படியெல்லாம் அரசுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பேசினால் அப்புறம் நடப்பதே வேறு என நெட்டிசன்களும் கண்டித்து வருகின்றனர்.

பிரபலங்களுடன் செல்ஃபி

பிரபலங்களுடன் செல்ஃபி

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு, அவர்களுக்கும் தனக்கும் தொடர்பு இருப்பது மாதிரி காட்டிக் கொண்டு வருகிறார். இசையமைப்பாளர் அனிருத், யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, சிம்பு என பலருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.

பிரேம்ஜி உடன்

பிரேம்ஜி உடன்

ஷூட்டிங்கின் போதும், பார்ட்டிகளின் போதும், பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு இப்படி பில்டப் செய்யாதீங்க என ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் கழுவி ஊற்றி வந்த நிலையில், தற்போது, நடிகர் பிரேம்ஜி உடன் ஒட்டி உராசியபடி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை போட்டு வைபிங் என கேப்ஷன் கொடுத்துள்ளார் மீரா மிதுன்.

சரக்கு கிடைக்காம

சரக்கு கிடைக்காம

நகைச்சுவை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி உடன் மீரா மிதுன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், ஆபாசமாக திட்டி வருகின்றனர். சிலர் இதே பொழப்பா போச்சு என்றும், ஓசி சரக்கா என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளனர். இவங்களாம் சரக்கு கிடைக்காம சுற்றும் கோஷ்டி டோய் என இந்த நெட்டிசன் மீம் போட்டு கலாய்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X