வெட்கமே இல்லையா.. கோலிவுட் மீது மீரா மிதுன் குற்றச்சாட்டு.. நார் நாராக கிழிக்கும் ரசிகர்கள்!

சென்னை: மீரா எனும் தனது பெயரை சமீப காலமாக தமிழ் திரைப்படங்களின் ஹீரோயின்களுக்கு அதிகம் சூட்டுகின்றனர், என்றும், கோலிவுட் அதற்காக வெட்கப்பட வேண்டும் என மீரா மிதுன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Recommended Video

Meera Mithun Phone Number in Adult Sight | Yashika Boy Friend

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன், சமூக வலைதளங்களில் தனது படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.

மீரா மிதுனின் இந்த லேட்டஸ்ட் குற்றச்சாட்டை பார்த்த கோலிவுட் ரசிகர்கள் ஐ செம காமெடி என மீரா மிதுனை பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

வெட்கமில்லையா

சமீப காலமாக தமிழில் வெளியாகும் படங்களில் நாயகியின் பெயர் மீரா என்று வைக்கப்படுவதற்கு, கோலிவுட் மற்றும் கோலிவுட் இயக்குநர்கள் வெட்கப்பட வேண்டும், நீங்க சம்பாதிக்க என் பெயர் தான் கிடைத்ததா? என்று மீரா மிதுன் புதிய டிசைனில் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் நாயகி ரிது வர்மாவுக்கு மீரா என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கும். அந்த பெயரை வைத்துக் கொண்டு பலரை காதலிப்பது போல நடித்து ரிது வர்மா ஏமாற்றுவார். அதைத்தான் மீரா மிதுன் குறிப்பிடுகிறார் என இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார்.

பொம்பள வேஷம்

பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுனை, நெட்டிசன்கள் சிலர், திருநங்கை என்று படு மோசமாக ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பதிவை பார்த்த நெட்டிசன் ஒருவர், "நீ என்ன வேணாலும் போஸ்ட் போடு, ஆனா, தயவு செஞ்சு இந்த பொம்பள வேஷத்தை மட்டும் போடாத" என படுமோசமாக விமர்சித்துள்ளார்.

இன்னும் எத்தனையோ

இன்னும் எத்தனை கொடுமையை பார்க்கணுமோ என வடிவேலுவின் எபிக் ஜிஃப் வீடியோவை பதிவிட்டு, இந்த நெட்டிசன் பங்கமாக வறுத்தெடுத்துள்ளார். மேலும், சில ரசிகர்கள், எதுக்கு இந்த தேவையில்லாத வீண் விளம்பரம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். போர் அடிக்குது தான், அதுக்குன்னு இப்படி எல்லாமா போஸ்ட் போடுவ என்றும் கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

ஒரே டிரெஸ்ஸை போட்டுக் கொண்டு ஒரு வாரமாக போஸ்ட் போட்டு ஏன் மீரா மிதுன் டார்ச்சர் பண்றீங்க, வேற போட்டோவே இல்லையா என்றும், எப்படி இப்படி டிசைன் டிசைனா யோசிக்கிறீங்க என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், மின்னுவதெல்லாம் பொன்னல்ல.. ஃபேஸ்புக்கில் இருப்பதெல்லாம் பெண்ணல்ல என்றும் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

டூப்ளிகேட் பெயர்

முதல்ல உன் பெயரே மீரா இல்லை.. தமிழ்ச்செல்வி தானே? அப்புறம் எதுக்கு இப்படி ஓவரா சீன் போடுற என, பல நெட்டிசன்களும், மீரா மிதுனின் உண்மையான பெயர் தமிழ்ச்செல்வி என்றும், மீரா மிதுன் என்பது மாடலிங் துறையில் நுழைவதற்காக அவருக்கு அவரே சூட்டிக் கொண்ட டூப்ளிகேட் பெயர் என்றும் ரசிகர்கள் பல விஷயங்களை கிளறி விடுகின்றனர்.

மென்டல்

நீ மட்டும் தான் இந்த உலகத்திலேயே மீராவா? வேற யாருக்கும் மீரா என்கிற பெயர் இல்லையா? உங்களுக்கு ஏதாவது புத்தி சுவாதினம் ஆகிடுச்சா? ரியல் மென்டல் நீ? என கண்டபடி மீரா மிதுனின் ட்வீட்டை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஆபாச கமெண்ட்ஸ்

ஆபாச கமெண்ட்ஸ்

மீரா பாய் காலத்திற்கு முன்பு இருந்தே மீரா என்கிற பெயர் பலருக்கும் வைக்கப் பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் மீரா எனும் பெயரில் உள்ளனர். இந்நிலையில், விளம்பரத்திற்காக இப்படி சர்ச்சையை கிளப்பும் மீரா மிதுனை, பல நெட்டிசன்கள், கெட்ட வார்த்தைகளில் ஆபாசமாகவும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X