இப்படி செஞ்சா.. அந்த பிரச்சனையை குறைக்கலாம்.. பிக்பாஸ் பிரபலம் கொடுத்த ஐடியா.. நெட்டிசன்ஸ் கலாய்!
சென்னை: பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்ட மாடல் அழகியான மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பிரச்சனையை கிளப்பியுள்ளார்.
Recommended Video
8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி மற்றும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மீரா மிதுன், பிக்பாஸ் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானார்.
தனது சமூக வலைதள பக்கங்களில், படு கவர்ச்சியாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

பெண்ணே அல்ல
மாடல் அழகி மற்றும் நடிகையான மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதில் இருந்தே அவரை பெண்ணே அல்ல என்றும், திருநங்கை என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பரவலாக கலாய்த்து வருகின்றனர். அதை எதிர்த்து அடிக்கடி புகார் ட்வீட்களையும் மீரா போட்டு வருகிறார்.

ஆபாசமாக
ஆனால், தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் ஆபாசமாகவும், ஓவர் கிளாமராகவும் உடை அணிந்து மீரா மிதுன் கொடுக்கும் போஸ்கள் தான், அவரை இந்த அளவுக்கு நெட்டிசன்கள் ஓட்ட காரணம் என்று சிலர் கூறி வருகின்றனர். மேலும், மீரா மிதுன் பதிவுக்கு கீழே, ஆபாச வார்த்தைகளால் நெட்டிசன்கள் சிலர் அவரை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

தமிழக முதல்வர்
சமீபத்தில், தான் ஊழலுக்கு எதிரானவள் என்றும், 2021ல் தான் முதல்வரானால் நிச்சயம் ஊழலற்ற தமிழ்நாட்டை உருவாக்குவேன் என மீரா மிதுன் சில நாட்களுக்கு முன்னதாக பதிவிட்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. மேலும், நல்லா காமெடி பண்றீங்க, உங்களுக்கு வேற வேலையே இல்லையா, பொழுது போகலைன்னா இப்படியா பேசுவீங்க என்றும் கலாய்த்தனர்.
ஆதாருடன்
இந்நிலையில், ஒவ்வொரு சமூக வலைதள கணக்குகளையும் ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டால், சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகளில் இருந்து தப்பிக்க முடியும் என்றும், மோசமாகவும், ஆபாசமாகவும் கமெண்ட் செய்பவர்களை சைபர் கிரைம் உடனடியாக பிடிக்கவும் அது வசதியாக இருக்கும் என மீரா மிதுன் பதிவிட்டுள்ளார்.
ஒழுங்கா இருங்க
அவரது இந்த அதிரடியான யோசனையை பார்த்து டென்ஷனான நெட்டிசன்கள், நாட்டில் என்ன பிரச்சனை போய்க்கிட்டு இருக்கு, இப்போ நீ என்ன பண்ண சொல்லிட்டு இருக்க, முதலில் நீ ஒழுங்கா எல்லாத்தையும் மூடிக்கிட்டு இரு என மீரா மிதுனை எச்சரித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
திருந்துங்க
நீங்க முதலில் ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் உங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதை நிறுத்துங்க, பின்னர், சைபர் கிரைம் குற்றங்கள் படிப்படியாக குறைந்து விடும். நீங்க அப்படி மோசமான பதிவுகளை போடுவதால், உங்களை பலரும் ஆபாசமாக திட்டுகிறார்கள் என்றும் சிலர் மீரா மிதுனுக்கு எடுத்துக் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











