ஹீரோயின்
மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழுக்குள் நுழைந்த மீரா ஜாஸ்மீனுக்கு ரன் படம் தான் நன்றாக ஓடியது. அடுத்து வந்தபாலா ஊத்திக் கொண்டது. புதிய கீதை சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. இதற்குள் சம்பளத்தை உயர்த்தியும்,மலையாளக் காதலரின் பேச்சைக் கேட்டு எடுத்தெறிந்து பேசியும் நடந்து கொண்டதால் வந்த சில சான்ஸ்களைக்கூட இழந்தார்.
அடுத்து அஜீத்தை நேரில் சந்தித்து மன்றாடி ஆஞ்சநேயாவில் வாய்ப்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்துஸ்ரீகாந்துடன் ஜூட் என்ற படத்தில் புக் ஆகியுள்ளார்.
இதில் ஆஞ்சநேயா சூட்டிங் இழுத்தடித்து எப்போதாவது ஒருமுறை தான் நடந்து வருகிறது. ஜூட் சூட்டிங்இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.
இதனால் கேரளாவிலேயே டேரா போட்ட மீரா, அங்கு சான்ஸ் தேடினார். வாய்ப்பும் கிடைத்தது. அவர் நடித்தகஸ்தூரி மான் என்ற மலையாளப் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இதனால் அவருக்கு தொடர்ந்துமலையாளத்தில் பல வாய்ப்புக்கள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனாலும், தனது பார்வையை தமிழின் மீது வைத்துள்ளார் மீரா. காரணம், மலையாளத்தில் இவருக்கு ஊதியம்வெறும் ரூ. 2 லட்சம் தான். தமிழில் ரூ. 25 லட்சத்தை சுரண்டிவிடுகிறார்.
இந் நிலையில் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய கஸ்தூரி மான் படத்தை தமிழில் ரீமேக்செய்ய வைக்க மீராவும் அவரது காதலரும் முயற்சி எடுத்து வெற்றியும் பெற்றுள்ளனர். அரோமாமணி என்பவர் இந்தப் படத்தை தமிழில் தயாரிக்கிறார். ஹீரோயின் மீராவே தான்.
ஆஞ்சநேயா, ஜூட் படங்களை விட இந்தப் படத்தையே அதிகமாக நம்பியிருக்கிறார் மீராஜாஸ்மீன். இந்தப் படம் தமிழில் தனக்கு நிலையான இடத்தை பிடித்துத் தரும் என்று அடித்துச்சொல்கிறார்.


Click it and Unblock the Notifications











