»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

இப்போது தான் திருந்த ஆரம்பித்துள்ளார் மீரா ஜாஸ்மீன்.

தன்னுடைய வயதை மீறிய காதலரும் மலையாள டைரக்டருமான லோகிததாசன் சொன்னதால் தமிழில்ஹீரோக்களை புழு மாதிரி மதித்து வந்தார்.

அதையும் மீறி இவருக்கு சான்ஸ் கொடுத்த விஜய் உள்ளிட்டஹீரோக்கள் தலையில் அடித்துக் கொள்ளும் அளவுக்கு சூட்டிங்குக்கு சரியாக வராமல் டார்ச்சர் தந்தார்.

இதனால் தனது புதிய கீதை படத்தில் மீராவை ஒதுக்கி அமீஷா படேல் காரெக்டரை நுழைத்து அவருக்குமுக்கியத்தும் தர வைத்தார். இப்போது இந்தப் படத்தின் விளம்பரங்களிலும் மீராவை கட் செய்துவிட்டார்கள்.

போஸ்டர்களிலும் மீராவை ஸ்டாம்ப் சைசுக்கு சிறிதாக்கிவிட்டு அமிஷாவையே புளோ-அப் செய்துள்ளார்கள்.

படத்திலும் இவரது காரெக்டரின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிட்டதால் புதிய கீதை நன்றாக ஓடியும் கூடமீராவுக்கு பெயர் கிடைக்காமல் போய்விட்டது.

தனது திமிரால் பல பட வாய்ப்புகளும் நழுவிவிட மனம் வெறுத்துப் போன மீரா இப்போது இறங்கி வரஆரம்பித்துள்ளார்.

லோகிததாஸ் பேச்சைக் கேட்டுத் தான் நான் தப்பு பண்ணிவிட்டேன் என்று அவராகவேதயாரிப்பாளர்கள், இளம் ஹீரோக்களுக்கு போன் செய்து சொல்லி வருகிறார்.

இனி புதிய மீராவைப் பார்ப்பீர்கள் என்றும் உறுதிமொழி தருகிறாராம்.

ஆனால், இதை சமாதானத்தை ஏற்கதயாரிப்பாளர்கள் தயார் தான். ஹீரோக்களில் யாரும் இதுவரை இறங்கி வரவில்லையாம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil