»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

புதிய கீதையில் விஜய் அண்ட் தயாரிப்பாளர் தரப்பால் புறக்கணிக்கப்பட்ட மீரா ஜாஸ்மினுக்கு அந்த சோகத்தைமறக்கடிக்கும் வகையில் பல படங்கள் புக் ஆகியுள்ளனவாம்.

புதிய கீதையில் மீரா நடித்திருக்கிறாரா என்று யோசிக்கும் அளவுக்கு அவரை போஸ்டர்களில் இருட்டடிப்புசெய்தனர். படத்திலும் தேவையில்லாமல் இன்னொரு ஹீரோயினாக அமீஷா பட்டேல் கொண்டு வரப்பட்டார்.

காதலர் லோகிததாசின் தவறான வழிகாட்டுதலால் தான் மீரா செய்த சேட்டைகள் தான் அவரை இருட்டடிப்புசெய்ய வைத்தன.

இது தவிர ஹீரோக்களுடன் ஒத்துழைக்க மறுத்ததாலும் டைரக்டர்களிடம் லோகிததாசன் வந்து நின்று கதை என்ன?,எத்தனை மணிக்கு சூட்டிங் என்று கேள்விகள் கேட்டதாலும் மேலும் பல படங்களில் இருந்தும் மீராகழற்றிவிடப்பட்டார்.

இதனால் கலங்கிப் போன மீரா இப்போது லோகிததாசனை தன் சினிமா சான்ஸ் விஷயத்தில் தலையிடாமல்ஒதுங்கியிருக்க வைத்துள்ளார். மேலும் தன்னைக் கழற்றிவிட்ட டைரக்டர்களை ஓடிப் போய் நேரில் சந்தித்து கண்கலங்கினர். இனி தப்பு நடக்காது என்று உறுதி தந்தார்.

மேலும் விஜய்யையும் சந்தித்தார். முன்பு அஜீத்துடன் நடிக்கமறுத்து, வந்த வாய்ப்பையும் உதறிய மீரா, அவரையும் சந்தித்துப் பேசினார்.

இதனால் அவருக்கு இப்போது 4 புதிய பட வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.

இதில் ஒன்று மணிரத்னத்தின் படம். இந்த சான்ஸ் தானாகவே வந்தது. மணிக்கு மீராவின் துறுதுறுப்பு ரொம்பவேபிடித்துப் போனதால் புக் செய்திருக்கிறார். ஆனால், மற்ற 3 சான்ஸ்களையும் மீரா விரட்டி, விரட்டிப் பிடித்தவை.

அவற்றைத் தக்க வைத்துக் கொண்டால் சரி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil