தனிப்பட்ட விருப்பங்களுக்கு என்னை அவர் பயன்படுத்திக்கொண்டார்... பிரபல ஹீரோயின் பகீர் புகார்
கொச்சி: தனது தனிப்பட்ட விருப்பங்களுக்காக அவர் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார் என்று நடிகை மீரா வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
தமிழில், உன்னைச் சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு உட்பட சில படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன்.
இவர், மலையாளத்தின் மோகன்லால் ஜோடியாக, தன்மத்ரா என்ற படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானாலும் தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் வரவில்லை. இப்போது சில மலையாள படங்களில் நடித்துவருகிறார்.

திருமணம்
இவர், பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன், விஷாலை காதலித்து 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

விவாகரத்து
இதையடுத்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். இதுவும் நீடிக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அரிஹா என்ற மகன் உள்ளார்.

மானேஜர்தான்
இந்நிலையில், மலையாள சினிமாவில், தான் நல்ல நிலைக்கு வராததற்கு தனது மானேஜர்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார் மீரா வாசுதேவன். அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதைத் தெரிவித்துள்ளார்.

முழுதாக நம்பினேன்
அவர் மேலும் கூறும்போது, தன்மத்ரா படம் ஹிட்டானதும் எனக்கு அதிக வாய்ப்புகள் வந்தன. எனக்கு மொழி பிரச்னை இருந்ததால், அப்போது எனது மானேஜரை முழுமையாக நம்பினேன். அதுதான் நான் செய்த பெரிய தவறு.

தனிப்பட்ட விருப்பம்
அவர் என்னைத் தனது தனிப்பட்ட விருப்பங்களுக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர் சொன்னதை நம்பி பல படங்களின் கதைகளை கூட கேட்காமல் கால்ஷீட் கொடுத்தேன். அவை அனைத்தும் தோல்வி படங்களாக அமைந்தன. முன்னணி இயக்குனர்கள் பலர், என்னை வைத்து படம் இயக்க நினைத்திருந்தனர் என்பதை பிறகுதான் தெரிந்துகொண்டேன்.

மற்ற நடிகைகள்
அந்த மானேஜர், எனக்கு வந்த பல வாய்ப்புகளை தடுத்தார். அந்த வாய்ப்புகளை தனக்கு வேண்டிய மற்ற நடிகைகளுக்கு கொடுத்தார். அப்போது நான் மும்பையில் இருந்ததால் இந்த விஷயங்கள் தெரியாது என்று தெரிவித்துள்ளார் மீரா வாசுதேவன்.


Click it and Unblock the Notifications











