»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கேரளத்து ஜோதிகா என்று கூறப்பட்டு வந்த மீரா ஜாஸ்மினுக்கு அங்கு பெரிய அளவில்வாய்ப்புக்கள் இல்லாததால் தமிழுக்கு வந்தார். வந்த புதிதில் மலையாள சினிமாவை உயர்த்தியும்தமிழ் சினிமாவைத் தாழ்த்தியும் பேசிவந்தார்.

இதனால் கூடிய சீக்கரமே ஊருக்கு விரப்படுவார் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொண்டார்கள்.ஆனால், இப்போதெல்லாம் தனது வாயை அடக்கிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

எல்லோரையும் மதிக்கிறார். தமிழ் சினிமா டெக்ஷீனியன்களை வாயாரப் புகழ்கிறார். இதற்குகைமேல் பலனும் கிடைக்க ஆரம்பித்துள்ளன. மேலும் பல புதிய படங்கள் புக் ஆகஆரம்பித்துள்ளன.

அதிக கவர்ச்சி மட்டும் வேண்டாம் என்று நயமாக எடுத்துக் கூறிவிட்டு எந்தப் படமானாலும் ஒப்புக்கொள்கிறார். பாலா படத்தில் ஷாமுடன் சில பாடல் காட்சிகளில் ஒட்டி, உரசி நடித்தது அவரதுமலையாளக் காதலர் லோகிததாசுக்குப் பிடிக்கவில்லையாம்.

இதனால் கவர்ச்சி சொட்ட சொட்ட நடிக்க மாட்டேன் என்று கூறிவிடுகிறார். ஆனால்,சேலையிலேயே முடிந்த வரை கவர்ச்சி காட்டத் தயார் என்று உறுதிமொழி அளிக்கிறார்.

இது இப்படி இருக்க அஜீத்தைக் கண்டாலே பிடிக்காத லோகிததாசின் ஆலோசனைப்படி அவரதுஅடுத்த படமான மகா வில் இருந்து மீண்டும் கழன்று கொண்டுவிட்டார் மீரா. முதலில் அஜீத்படத்தில் நடிக்க மறுத்தார். அவரை சமாதானப்படுத்தி நடிக்க ஒப்புக் கொள்ள வைத்துவிட்டுவிளம்பரமும் செய்தார்கள்.

ஆனால், இப்போது மீண்டும் அந்தப் படத்தில் இருந்து விலகிக் கொண்டுவிட்டார் மீரா. இதனால்அஜீத் கடுகடுப்பில் இருக்கிறார். அவரைவிட அந்தப் படத்தின் இயக்குனர் கடுப்பில் இருக்கிறார்.அவரை தரக் குறைவாக மீரா நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil