மீராவின் அடுத்த ரவுண்டு தெலுங்கில் கிடைத்து வந்த ஓரிரு வாய்ப்புக்களும் த்ரிஷா, ஆயிஷா போன்ற அதிரடி கவர்ச்சி ஹீரோயின்களால் பறிபோய்விட்டதால் தமிழையே பெரிதும் நம்பியிருக்கிறார் மீரா ஜாஸ்மீன்.தமிழில் இவர் நடித்த ரன் படம் நன்றாக ஓடியபோது பல வாய்ப்புக்கள் மீராவைத் தேடி வந்தன. ஆனால், துட்டு ஜாஸ்திஎன்பதால் தெலுங்குக்குப் போய்விட்டார்.இதையடுத்து அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் அல்லாடி மீரா சொந்த மொழியான மலையாளத்திலே நடிக்கஆரம்பித்தார்.அங்கு பெரிய அளவில் பைசா பெயராது என்பதால் மீண்டும் தமிழில் முயன்றார். இதற்காக மாதவன் உள்ளிட்ட தான் நடித்தஹீரோக்களின் சிபாரிசுக்காக அலைந்தார். யாரும் கை கொடுக்காததால் கஸ்தூரிமான் என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரிக்கஆரம்பித்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.படத்தை ஆரம்பித்த நேரமோ என்னவோ மீராவுக்கு அடுத்தடுத்து படங்கள் புக் ஆக ஆரம்பித்துவிட்டது. கஸ்தூரிமானைத்தொடர்ந்து மீரா நடிக்கும் படத்தின் பெயர் சண்டைக் கோழி. இதில் ஹீரோ செல்லமே விஷால். படத்தை இயக்குவது மீராவுக்குஏற்கனவே ரன் மூலம் அறிமுகமான இயக்குனர் லிங்குசாமி.இதையடுத்து சேரனின் இயக்கத்தில் பொக்கிஷம் படத்தில் நடிக்கிறார் மீரா.கஸ்தூரிமானைப் பொறுத்தவரை மீராவின் மனசுக்கு மிக வேண்டிய லோகிததாஸ் தான் இயக்குனர். ஹீரோ பிரசன்னா. இருகாதலர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு இடையிலான மோதல்.. இது தான் கதையாம். பாசம், குரூரம் என பல தரப்பட்டமனிதர்களால் ஒரு காதல் படும் பாட்டை அழகாக கவிதை மாதிரி சொல்லியிருக்கிறாராம் லோகிததாஸ்.17 வருடங்களுக்கு முன் லோகிததாஸ் எழுதிய தனியாவர்த்தனம் என்ற படம் கேரளத்தை உலுக்கியது. மலையாளசினிமாவையே புரட்டிப் போட்டது. அந்த வகையிலான ஒரு ஸ்டோரி லைன் தான் இந்தப் படத்திலுமாம்.மலையாளத்தில் இதை எடுத்து மிகப் பெறும் வெற்றிப்படமாக்கிய கையோடு தமிழிலும் மீராவின் காசில் எடுக்கிறார்லோகிததாஸ். ஹீரோயினாக மீராவே நடிக்கிறார்."கஸ்தூரிமான் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொள்ளும் முன் மலையாளப் பதிப்பைப் பார்த்த இளையராஜா,மணிக்கணக்கில் லோகித்தாசை பாராட்டிக் கொண்டிருந்தாராம்.மற்றபடி ஏகப்பட்ட மலையாளத்துக்கு ஆட்கள் நடித்துக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் முடிந்து ரீ-ரெக்கார்டிங்வேலைகள் ஆரம்பித்துவிட்டன.படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உடுமலைப்பேட்டையில் எடுக்கப்பட்டதாம். அப்போது உணர்ச்சிவயப்பட்டு நடித்த மீரா,அப்படியே காட்சியில் மூழ்கிப போய் மயங்கி விழுந்துவிட்டாாரம். (இதுவல்லவோ தொழில் பற்று)இதனால் லோகிததாசும் யூனிட்டாரும் பதறிக் கொண்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றார்களாம்.ஆனால், தானாகவே சுதாரித்துக் கொண்டுவிட்டாராம் மீரா.இந்தப் படத்தின் சூட்டிங் முடிந்த உடனேயே சண்டைக் கோழி படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் மீரா. காரைக்குடி,பாண்டிச்சேரி, சிதம்பரம் ஆகிய இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது இந்தப் படத்தின் சூட்டிங். இதில் விஷாலுக்கு ஜோடியாகநன்றாகவே தாராளம் காட்டி வருகிறார் மீரா. எல்லாம் தெலுங்கில் நடித்த அனுபவம் தான் என்கிறார்கள்.இதற்கிடையே லோகிததாசுக்கும் மீராவுக்கும் முடிச்சு போட்டு வரும் தகவல்கள் நின்றபாடில்லை. இருவரும் சென்னை ஸ்டார்ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு டீப் டிஸ்கஷனில் ஈடுபடுகிறார்களாம்.இந் நிலையில் தமிழில் என்ன இத்தனை நாளாக காணோமே என்று ஒரு நிருபர் கேட்டதற்கு கஜினி, ப்ரியசகி, கனா கண்டேன்..இதுல எல்லாம் என்னைத் தான் நடிக்கக் கூப்பிட்டாங்க. ஆனால், கதை சரியில்லாததால் நான் ஒத்துக்கலை என்று பதில் சொல்லிஇருக்கிறார் மீரா.இதனால் மேற்சொன்ன படங்களின் இயக்குனர்களும், நடிகர்-நடிகைகளும் மீரா மீது செம கடுப்பில் இருக்கிறார்கள்.நமக்கெதுக்கு வம்பு.

By Staff

தெலுங்கில் கிடைத்து வந்த ஓரிரு வாய்ப்புக்களும் த்ரிஷா, ஆயிஷா போன்ற அதிரடி கவர்ச்சி ஹீரோயின்களால் பறிபோய்விட்டதால் தமிழையே பெரிதும் நம்பியிருக்கிறார் மீரா ஜாஸ்மீன்.

தமிழில் இவர் நடித்த ரன் படம் நன்றாக ஓடியபோது பல வாய்ப்புக்கள் மீராவைத் தேடி வந்தன. ஆனால், துட்டு ஜாஸ்திஎன்பதால் தெலுங்குக்குப் போய்விட்டார்.

இதையடுத்து அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் அல்லாடி மீரா சொந்த மொழியான மலையாளத்திலே நடிக்கஆரம்பித்தார்.

அங்கு பெரிய அளவில் பைசா பெயராது என்பதால் மீண்டும் தமிழில் முயன்றார். இதற்காக மாதவன் உள்ளிட்ட தான் நடித்தஹீரோக்களின் சிபாரிசுக்காக அலைந்தார். யாரும் கை கொடுக்காததால் கஸ்தூரிமான் என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரிக்கஆரம்பித்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.

படத்தை ஆரம்பித்த நேரமோ என்னவோ மீராவுக்கு அடுத்தடுத்து படங்கள் புக் ஆக ஆரம்பித்துவிட்டது. கஸ்தூரிமானைத்தொடர்ந்து மீரா நடிக்கும் படத்தின் பெயர் சண்டைக் கோழி. இதில் ஹீரோ செல்லமே விஷால். படத்தை இயக்குவது மீராவுக்குஏற்கனவே ரன் மூலம் அறிமுகமான இயக்குனர் லிங்குசாமி.

இதையடுத்து சேரனின் இயக்கத்தில் பொக்கிஷம் படத்தில் நடிக்கிறார் மீரா.

கஸ்தூரிமானைப் பொறுத்தவரை மீராவின் மனசுக்கு மிக வேண்டிய லோகிததாஸ் தான் இயக்குனர். ஹீரோ பிரசன்னா. இருகாதலர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு இடையிலான மோதல்.. இது தான் கதையாம். பாசம், குரூரம் என பல தரப்பட்டமனிதர்களால் ஒரு காதல் படும் பாட்டை அழகாக கவிதை மாதிரி சொல்லியிருக்கிறாராம் லோகிததாஸ்.


17 வருடங்களுக்கு முன் லோகிததாஸ் எழுதிய தனியாவர்த்தனம் என்ற படம் கேரளத்தை உலுக்கியது. மலையாளசினிமாவையே புரட்டிப் போட்டது. அந்த வகையிலான ஒரு ஸ்டோரி லைன் தான் இந்தப் படத்திலுமாம்.

மலையாளத்தில் இதை எடுத்து மிகப் பெறும் வெற்றிப்படமாக்கிய கையோடு தமிழிலும் மீராவின் காசில் எடுக்கிறார்லோகிததாஸ். ஹீரோயினாக மீராவே நடிக்கிறார்.

"கஸ்தூரிமான் படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொள்ளும் முன் மலையாளப் பதிப்பைப் பார்த்த இளையராஜா,மணிக்கணக்கில் லோகித்தாசை பாராட்டிக் கொண்டிருந்தாராம்.

மற்றபடி ஏகப்பட்ட மலையாளத்துக்கு ஆட்கள் நடித்துக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் முடிந்து ரீ-ரெக்கார்டிங்வேலைகள் ஆரம்பித்துவிட்டன.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உடுமலைப்பேட்டையில் எடுக்கப்பட்டதாம். அப்போது உணர்ச்சிவயப்பட்டு நடித்த மீரா,அப்படியே காட்சியில் மூழ்கிப போய் மயங்கி விழுந்துவிட்டாாரம். (இதுவல்லவோ தொழில் பற்று)

இதனால் லோகிததாசும் யூனிட்டாரும் பதறிக் கொண்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றார்களாம்.ஆனால், தானாகவே சுதாரித்துக் கொண்டுவிட்டாராம் மீரா.


இந்தப் படத்தின் சூட்டிங் முடிந்த உடனேயே சண்டைக் கோழி படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் மீரா. காரைக்குடி,பாண்டிச்சேரி, சிதம்பரம் ஆகிய இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது இந்தப் படத்தின் சூட்டிங். இதில் விஷாலுக்கு ஜோடியாகநன்றாகவே தாராளம் காட்டி வருகிறார் மீரா. எல்லாம் தெலுங்கில் நடித்த அனுபவம் தான் என்கிறார்கள்.

இதற்கிடையே லோகிததாசுக்கும் மீராவுக்கும் முடிச்சு போட்டு வரும் தகவல்கள் நின்றபாடில்லை. இருவரும் சென்னை ஸ்டார்ஹோட்டல் ஒன்றில் ரூம் போட்டு டீப் டிஸ்கஷனில் ஈடுபடுகிறார்களாம்.

இந் நிலையில் தமிழில் என்ன இத்தனை நாளாக காணோமே என்று ஒரு நிருபர் கேட்டதற்கு கஜினி, ப்ரியசகி, கனா கண்டேன்..இதுல எல்லாம் என்னைத் தான் நடிக்கக் கூப்பிட்டாங்க. ஆனால், கதை சரியில்லாததால் நான் ஒத்துக்கலை என்று பதில் சொல்லிஇருக்கிறார் மீரா.

இதனால் மேற்சொன்ன படங்களின் இயக்குனர்களும், நடிகர்-நடிகைகளும் மீரா மீது செம கடுப்பில் இருக்கிறார்கள்.

நமக்கெதுக்கு வம்பு.

Read more about: meera is back in tamil films
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X