»   »  இன்னொரு அலைபாயுதே அலைபாயுதே ஏற்படுத்திய காதல் அலை இன்னும் பல இளசுகளின் மனதிலிருந்து நீங்காத நிலையில் அப்படத்தின் கதையைத்தழுவி மெர்க்குரி பூக்கள் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற சூப்பர் டப்பா படத்தைக் கொடுத்தவர் ஸ்டான்லி. படத்தில் நடித்த அத்தனை பேரும்வெறுப்படிக்க, அபர்ணா மட்டும் கொஞ்சம் போல கண்ணுக்கு விருந்தளித்தார்.தனுஷின் மாபெரும் சரிவுக்கு அடிக்கல் நாட்டிய படம் புதுக்கோட்டையிலிருந்து சரவணன். இப்படி ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்ததால், படத்தின் இயக்குனர் ஸ்டான்லி காணாமல் போனார். இப்போது மெர்க்குரிப்பூக்கள் படம் மூலம் திரும்பி வருகிறார்.இந்த முறை அட்டகாசமான காதல் கதையுடன் களத்தில் இறங்கியுள்ளதாக கூறுகிறார் ஸ்டான்லி.ஸ்ரீகாந்த்தும், மீரா ஜாஸ்மினும் ஜோடி போட்டுள்ள இப்படத்தின் கதையைக் கேட்டால் அலைபாயுதேதான் நினைவுக்கு வருகிறது.காதலிக்கும்போது படு ஜாலியாகவும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர்கள், கல்யாணத்திற்குப் பிறகும் அதேபோலஇருக்க முடிவதில்லை. அவர்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்னச் சச்சரவுகள் பெரும் பிரச்சினையில் போய் முடிகின்றன. கடைசியில் அவர்களை காதலேமீண்டும் சேர்த்து வைக்கிறது. இதுதான் மெர்க்குரிப் பூக்கள் கதையாம்.இதே கதையைத்தான் அலைபாயுதேவிலும் மணிரத்தினம் சொல்லியிருந்தார். சரி, கதையை விடுங்கள். படத்தில் இன்னொருசுவாரஸ்யமான மேட்டர் உண்டு. ஸ்ரீகாந்த்துடன், ரொம்ப நெருக்கமாக நடித்துள்ளாராம் மீரா ஜாஸ்மின்.புதுசா கட்டிக் கொண்ட ஜோடி எப்படி அன்னியோன்யமாக, இணை பிரியாமல் நடந்து கொள்வார்களோ, அதேபோலஅசத்தியிருக்கிறார்களாம் ஸ்ரீயும், மீராவும்.ஹைதராபாத்திலேயே பெரும்பாலான சூட்டிங்கை முடித்துவிட்டார்கள். படம் பிப்ரவரியில் வெளியாகிறதாம். சண்டைக்கோழி படம் மீராவுக்கு பெரிய பிரேக் கொடுத்துள்ள நிலையில் மெர்க்குரிப் பூக்களில் கவர்ச்சியைக் காட்டி கோதாவில்இறங்கினால் தமிழில் நிலைத்துவிட முடியும் என்ற திட்டத்தில் இருக்கிறாராம் மீரா. இதனால் பாடல் காட்சிகளில் கிளாமரில் கொடிகட்டிவிட்டிருக்கிறார்.கிளாமராக நடிக்க மாட்டேன்னு வீம்பு பிடிப்பீர்களே இந்தப் படத்தில் எப்படி? என்று மீராவிடம் கேட்டால், இதை கிளாமர் என்றுசொல்ல முடியாது. இளஞ்ஜோடிகள், புதுசாக கல்யாணம் செய்து கொண்டவர்கள், எப்படி நடந்து கொள்வார்கள்? அப்படித்தான்இப்படத்தில் நானும், ஸ்ரீகாந்த்தும், நடித்துள்ளோம். இதில் ஆபாசம் இருக்காது. கொஞ்சம் போல கிளாமர் இருந்தால் தப்பேஇல்லை.ஒரே மாதிரியாக நடித்தால் பார்ப்பவர்களுக்கு போரடித்து விடும் இல்லையா? என்றார் மீரா.நியாயமான பேச்சுதான்...

இன்னொரு அலைபாயுதே அலைபாயுதே ஏற்படுத்திய காதல் அலை இன்னும் பல இளசுகளின் மனதிலிருந்து நீங்காத நிலையில் அப்படத்தின் கதையைத்தழுவி மெர்க்குரி பூக்கள் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற சூப்பர் டப்பா படத்தைக் கொடுத்தவர் ஸ்டான்லி. படத்தில் நடித்த அத்தனை பேரும்வெறுப்படிக்க, அபர்ணா மட்டும் கொஞ்சம் போல கண்ணுக்கு விருந்தளித்தார்.தனுஷின் மாபெரும் சரிவுக்கு அடிக்கல் நாட்டிய படம் புதுக்கோட்டையிலிருந்து சரவணன். இப்படி ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்ததால், படத்தின் இயக்குனர் ஸ்டான்லி காணாமல் போனார். இப்போது மெர்க்குரிப்பூக்கள் படம் மூலம் திரும்பி வருகிறார்.இந்த முறை அட்டகாசமான காதல் கதையுடன் களத்தில் இறங்கியுள்ளதாக கூறுகிறார் ஸ்டான்லி.ஸ்ரீகாந்த்தும், மீரா ஜாஸ்மினும் ஜோடி போட்டுள்ள இப்படத்தின் கதையைக் கேட்டால் அலைபாயுதேதான் நினைவுக்கு வருகிறது.காதலிக்கும்போது படு ஜாலியாகவும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர்கள், கல்யாணத்திற்குப் பிறகும் அதேபோலஇருக்க முடிவதில்லை. அவர்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்னச் சச்சரவுகள் பெரும் பிரச்சினையில் போய் முடிகின்றன. கடைசியில் அவர்களை காதலேமீண்டும் சேர்த்து வைக்கிறது. இதுதான் மெர்க்குரிப் பூக்கள் கதையாம்.இதே கதையைத்தான் அலைபாயுதேவிலும் மணிரத்தினம் சொல்லியிருந்தார். சரி, கதையை விடுங்கள். படத்தில் இன்னொருசுவாரஸ்யமான மேட்டர் உண்டு. ஸ்ரீகாந்த்துடன், ரொம்ப நெருக்கமாக நடித்துள்ளாராம் மீரா ஜாஸ்மின்.புதுசா கட்டிக் கொண்ட ஜோடி எப்படி அன்னியோன்யமாக, இணை பிரியாமல் நடந்து கொள்வார்களோ, அதேபோலஅசத்தியிருக்கிறார்களாம் ஸ்ரீயும், மீராவும்.ஹைதராபாத்திலேயே பெரும்பாலான சூட்டிங்கை முடித்துவிட்டார்கள். படம் பிப்ரவரியில் வெளியாகிறதாம். சண்டைக்கோழி படம் மீராவுக்கு பெரிய பிரேக் கொடுத்துள்ள நிலையில் மெர்க்குரிப் பூக்களில் கவர்ச்சியைக் காட்டி கோதாவில்இறங்கினால் தமிழில் நிலைத்துவிட முடியும் என்ற திட்டத்தில் இருக்கிறாராம் மீரா. இதனால் பாடல் காட்சிகளில் கிளாமரில் கொடிகட்டிவிட்டிருக்கிறார்.கிளாமராக நடிக்க மாட்டேன்னு வீம்பு பிடிப்பீர்களே இந்தப் படத்தில் எப்படி? என்று மீராவிடம் கேட்டால், இதை கிளாமர் என்றுசொல்ல முடியாது. இளஞ்ஜோடிகள், புதுசாக கல்யாணம் செய்து கொண்டவர்கள், எப்படி நடந்து கொள்வார்கள்? அப்படித்தான்இப்படத்தில் நானும், ஸ்ரீகாந்த்தும், நடித்துள்ளோம். இதில் ஆபாசம் இருக்காது. கொஞ்சம் போல கிளாமர் இருந்தால் தப்பேஇல்லை.ஒரே மாதிரியாக நடித்தால் பார்ப்பவர்களுக்கு போரடித்து விடும் இல்லையா? என்றார் மீரா.நியாயமான பேச்சுதான்...

Posted By:
Subscribe to Oneindia Tamil
அலைபாயுதே ஏற்படுத்திய காதல் அலை இன்னும் பல இளசுகளின் மனதிலிருந்து நீங்காத நிலையில் அப்படத்தின் கதையைத்தழுவி மெர்க்குரி பூக்கள் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற சூப்பர் டப்பா படத்தைக் கொடுத்தவர் ஸ்டான்லி. படத்தில் நடித்த அத்தனை பேரும்வெறுப்படிக்க, அபர்ணா மட்டும் கொஞ்சம் போல கண்ணுக்கு விருந்தளித்தார்.

தனுஷின் மாபெரும் சரிவுக்கு அடிக்கல் நாட்டிய படம் புதுக்கோட்டையிலிருந்து சரவணன்.

இப்படி ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்ததால், படத்தின் இயக்குனர் ஸ்டான்லி காணாமல் போனார். இப்போது மெர்க்குரிப்பூக்கள் படம் மூலம் திரும்பி வருகிறார்.

இந்த முறை அட்டகாசமான காதல் கதையுடன் களத்தில் இறங்கியுள்ளதாக கூறுகிறார் ஸ்டான்லி.

ஸ்ரீகாந்த்தும், மீரா ஜாஸ்மினும் ஜோடி போட்டுள்ள இப்படத்தின் கதையைக் கேட்டால் அலைபாயுதேதான் நினைவுக்கு வருகிறது.காதலிக்கும்போது படு ஜாலியாகவும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பவர்கள், கல்யாணத்திற்குப் பிறகும் அதேபோலஇருக்க முடிவதில்லை.

அவர்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்னச் சச்சரவுகள் பெரும் பிரச்சினையில் போய் முடிகின்றன. கடைசியில் அவர்களை காதலேமீண்டும் சேர்த்து வைக்கிறது. இதுதான் மெர்க்குரிப் பூக்கள் கதையாம்.

இதே கதையைத்தான் அலைபாயுதேவிலும் மணிரத்தினம் சொல்லியிருந்தார். சரி, கதையை விடுங்கள். படத்தில் இன்னொருசுவாரஸ்யமான மேட்டர் உண்டு. ஸ்ரீகாந்த்துடன், ரொம்ப நெருக்கமாக நடித்துள்ளாராம் மீரா ஜாஸ்மின்.

புதுசா கட்டிக் கொண்ட ஜோடி எப்படி அன்னியோன்யமாக, இணை பிரியாமல் நடந்து கொள்வார்களோ, அதேபோலஅசத்தியிருக்கிறார்களாம் ஸ்ரீயும், மீராவும்.

ஹைதராபாத்திலேயே பெரும்பாலான சூட்டிங்கை முடித்துவிட்டார்கள். படம் பிப்ரவரியில் வெளியாகிறதாம்.

சண்டைக்கோழி படம் மீராவுக்கு பெரிய பிரேக் கொடுத்துள்ள நிலையில் மெர்க்குரிப் பூக்களில் கவர்ச்சியைக் காட்டி கோதாவில்இறங்கினால் தமிழில் நிலைத்துவிட முடியும் என்ற திட்டத்தில் இருக்கிறாராம் மீரா. இதனால் பாடல் காட்சிகளில் கிளாமரில் கொடிகட்டிவிட்டிருக்கிறார்.

கிளாமராக நடிக்க மாட்டேன்னு வீம்பு பிடிப்பீர்களே இந்தப் படத்தில் எப்படி? என்று மீராவிடம் கேட்டால், இதை கிளாமர் என்றுசொல்ல முடியாது. இளஞ்ஜோடிகள், புதுசாக கல்யாணம் செய்து கொண்டவர்கள், எப்படி நடந்து கொள்வார்கள்? அப்படித்தான்இப்படத்தில் நானும், ஸ்ரீகாந்த்தும், நடித்துள்ளோம். இதில் ஆபாசம் இருக்காது. கொஞ்சம் போல கிளாமர் இருந்தால் தப்பேஇல்லை.

ஒரே மாதிரியாக நடித்தால் பார்ப்பவர்களுக்கு போரடித்து விடும் இல்லையா? என்றார் மீரா.

நியாயமான பேச்சுதான்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil