twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மயங்கிய மீரா ஜாஸ்மின் தனது காட்பாதர் லோகித தாஸ் இயக்கும் கஸ்தூரி மான் படப்பிடிப்பின் போது திடீரென நடிகை மீரா ஜாஸ்மின் மயங்கி கீழேவிழுந்து விட்டாராம். உணர்ச்சி வசப்பட்டு நடித்தது தான் அந்த மயக்கத்திற்கு காரணம் என்று பிறகு தான் தெரிய வந்தது.மிக இளம் வயதிலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்று சாதனை படைத்திருப்பவர் மீரா ஜாஸ்மின். தமிழில் இவர்அறிமுகமான ரன் நன்றாக ஓடிய போதிலும், மணிரத்னத்தின் ஆய்த எழுத்தில் சிறப்பாக நடித்த போதிலும் கோலிவுட்டில்இன்னும் முன்ணணிக்கு வர முடியவில்லை.ரன் லிங்குசாமி இயக்கும் சண்டைக் கோழியிலும், சேரனின் பொக்கிஷத்திலும் மீரா திறமையைக் காட்டி வருகின்ற போதிலும்தனது காட்பாதர் லோகித தாஸ் இயக்கும் கஸ்தூரி மான் படத்தில் தான் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார்.மலையாளத்திலும் இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் தான் நாயகியாக நடித்தார். இந்தப் படம் மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்றது. இதனால் தமிழிலும் கஸ்தூரி மானை சூப்பர் ஹிட்டாக்கி விட வேண்டும் என்று டைரக்டரை விட மீராவுக்குத் தான்ஆர்வம் மிக அதிகமாக உள்ளது.இதனால் காட்சிகள் மலையாளத்தை விட மிக சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியிலும் மிகவும்உணர்ச்சிவசப்பட்டு நடித்து வருகிறாராம். டைரக்டர் சொல்லித் தருவதை விட ஒரு படி மேலே போய் விடுகிறாராம்.சமீபத்தில் உடுமலைப் பேட்டையில் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மிக மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.கதாநாயகன் பிரசன்னாவும், மீரா ஜாஸ்மினும் சந்தித்து பேசும் உருக்கமான காட்சிகளை எடுக்க வேண்டும்.டைரக்டர் லோகித தாஸ், ஸ்டார்ட் ஆக்ஷன் கேமரா என்று சொன்னதும் தான் தாமதம்.. மீரா உணர்ச்சிகளைக் கொட்டி நடித்துக்கொண்டிருந்தார். கேமரா ஓடிக் கொண்டிருந்தது. திடீரென பார்த்தால் டயலாக் பேசிக் கெண்டிருந்த மீரா, அப்படியே பொத்தெனமயக்கம் போட்டு விழுந்து விட்டார்.இதைப் பார்த்த யூனிட் ஆட்களும், டைரக்டரும் என்னவோ, ஏதோ என பயந்து மீராவை தட்டி எழுப்பினர். அவர் கண்களைதிறக்கவில்லை. உடனடியாக சோடாவை கொண்டு வந்து முகத்தில் தெளித்தார்கள். அதற்குப் பிறகு தான் மெதுவாக கண்திறந்தார் மீரா.என்ன ஆச்சு என்று விசாரித்த போது அவர் என்ன சொன்னார் தெரியுமா? மலையாளத்தில் இந்தப் படத்தில் நடித்ததினால்எனக்கு மிக நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தது. அதை விட தமிழில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு நடித்தேன்.திடீரென எனக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். வேறு ஒன்றும் பயப்படும் இல்லைஎன்றார்.இதற்குப் பிறகு தான் டைரக்டர் உட்பட அனைவருக்கும் மூச்சே வந்தது. நடிப்பு தான் என் மூச்சு என்று கூறி கேமரா முன் ஜடமாகநிற்கும் சிலருக்கு முன் மீராவின் தொழில் பக்தி அனைவரையும் வியக்க வைத்தது.இன்னொரு தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்!

    By Staff
    |


    தனது காட்பாதர் லோகித தாஸ் இயக்கும் கஸ்தூரி மான் படப்பிடிப்பின் போது திடீரென நடிகை மீரா ஜாஸ்மின் மயங்கி கீழேவிழுந்து விட்டாராம். உணர்ச்சி வசப்பட்டு நடித்தது தான் அந்த மயக்கத்திற்கு காரணம் என்று பிறகு தான் தெரிய வந்தது.

    மிக இளம் வயதிலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்று சாதனை படைத்திருப்பவர் மீரா ஜாஸ்மின். தமிழில் இவர்அறிமுகமான ரன் நன்றாக ஓடிய போதிலும், மணிரத்னத்தின் ஆய்த எழுத்தில் சிறப்பாக நடித்த போதிலும் கோலிவுட்டில்இன்னும் முன்ணணிக்கு வர முடியவில்லை.

    ரன் லிங்குசாமி இயக்கும் சண்டைக் கோழியிலும், சேரனின் பொக்கிஷத்திலும் மீரா திறமையைக் காட்டி வருகின்ற போதிலும்தனது காட்பாதர் லோகித தாஸ் இயக்கும் கஸ்தூரி மான் படத்தில் தான் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

    மலையாளத்திலும் இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் தான் நாயகியாக நடித்தார். இந்தப் படம் மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்றது. இதனால் தமிழிலும் கஸ்தூரி மானை சூப்பர் ஹிட்டாக்கி விட வேண்டும் என்று டைரக்டரை விட மீராவுக்குத் தான்ஆர்வம் மிக அதிகமாக உள்ளது.

    இதனால் காட்சிகள் மலையாளத்தை விட மிக சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியிலும் மிகவும்உணர்ச்சிவசப்பட்டு நடித்து வருகிறாராம். டைரக்டர் சொல்லித் தருவதை விட ஒரு படி மேலே போய் விடுகிறாராம்.

    சமீபத்தில் உடுமலைப் பேட்டையில் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மிக மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.கதாநாயகன் பிரசன்னாவும், மீரா ஜாஸ்மினும் சந்தித்து பேசும் உருக்கமான காட்சிகளை எடுக்க வேண்டும்.

    டைரக்டர் லோகித தாஸ், ஸ்டார்ட் ஆக்ஷன் கேமரா என்று சொன்னதும் தான் தாமதம்.. மீரா உணர்ச்சிகளைக் கொட்டி நடித்துக்கொண்டிருந்தார். கேமரா ஓடிக் கொண்டிருந்தது. திடீரென பார்த்தால் டயலாக் பேசிக் கெண்டிருந்த மீரா, அப்படியே பொத்தெனமயக்கம் போட்டு விழுந்து விட்டார்.

    இதைப் பார்த்த யூனிட் ஆட்களும், டைரக்டரும் என்னவோ, ஏதோ என பயந்து மீராவை தட்டி எழுப்பினர். அவர் கண்களைதிறக்கவில்லை. உடனடியாக சோடாவை கொண்டு வந்து முகத்தில் தெளித்தார்கள். அதற்குப் பிறகு தான் மெதுவாக கண்திறந்தார் மீரா.

    என்ன ஆச்சு என்று விசாரித்த போது அவர் என்ன சொன்னார் தெரியுமா? மலையாளத்தில் இந்தப் படத்தில் நடித்ததினால்எனக்கு மிக நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தது. அதை விட தமிழில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு நடித்தேன்.

    திடீரென எனக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். வேறு ஒன்றும் பயப்படும் இல்லைஎன்றார்.

    இதற்குப் பிறகு தான் டைரக்டர் உட்பட அனைவருக்கும் மூச்சே வந்தது. நடிப்பு தான் என் மூச்சு என்று கூறி கேமரா முன் ஜடமாகநிற்கும் சிலருக்கு முன் மீராவின் தொழில் பக்தி அனைவரையும் வியக்க வைத்தது.

    இன்னொரு தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்!

      Read more about: good girl meera jasmine
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X