»   »  சக்கப்போடு போடு மீரா!

சக்கப்போடு போடு மீரா!

Subscribe to Oneindia Tamil

மீரா ஜாஸ்மின் பற்றி கோலிவுட்டில் "மகா டாக்" உலவி வருகிறது.

"பாடம் ஒண்ணு விலாபம் என்ற மலையாளப் படத்தின் மூலம் மிக இளம் வயதிலேயே தேசிய விருது வாங்கி சாதனை படைத்தவர்ரன் நாயகி மீரா ஜாஸ்மின். இவர் மீண்டும் தேசிய விருதுக்கு குறி வைத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

காமிலினி என்ற அந்த படத்தில் ஆந்திராவில் வசிக்கும் மலை ஜாதி மக்களின் கதையை உருக்கமாக சொல்லப் போகிறார்களாம்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய அந்த மக்கள் பெற்ற குழந்தைகளை விற்பது போல் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில்மலை ஜாதிப் பெண்ணாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார்.

இந்தப் படத்தை இயக்கும் கே.என்.டி.சாஸ்திரி, பத்திரிகையாளராக இருந்தவர். ஆந்திர மாநில அரசின் சிறந்த விருது பெற்ற இவர்காமிலினி கதையை முதலில் செளந்தர்யாவிடம் தான் சொன்னாராம்.

கதையை கேட்டு பாராட்டிய சொளந்தர்யா, சொந்தமாகவே தயாரித்து நடித்து தருவதாக கூறியுள்ளார். ஆனால் அதற்குள் அவர்விமான விபத்தில் பலியாகி விட்டார். இதற்குப் பிறகு தான் டைரக்டர் சாஸ்திரி மீரா ஜாஸ்மினிடம் இந்தக் கதையை கூறியுள்ளார்.

கதையைக் கேட்டதுமே தானே நடிப்பதாக மீரா ஜாஸ்மின் கூறிவிட்டார். இதனால் காமிலினி வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப்படத்திலும் தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று உறுதியாக ஜாஸ்மின் நம்புகிறார்.

இது ஒருபுறமிருக்க மலையாளத்தில் லோகிததாஸ் இயக்கிய கஸ்தூரிமான் படம் அதே பெயரில் தமிழில் தயாராகி வருகிறது. இதில்மீரா தற்போது நடித்து வருகிறார். அவருடன் அழகிய தீயே பிரசன்னா நடிக்கிறார் .அதே காட்பாதர் லோகிததாஸ் தான் கஸ்தூரிபடத்தையும் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்திற்கு இருவரும் அடிக்கடி சென்னை ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் டீப் டிஸ்கஷனில் ஈடுபடுகிறார்களாம். அதுவும்சும்மா இல்லையாம், மப்பும், மந்தாரமுமாக டிஸ்கஷன் நடக்கிறதாம்.

சமீபத்தில் 3 நாட்கள் ஹோட்டலில் இருவரும் தனித் தனி அறை எடுத்துத் தங்கியுள்ளனர். ஆனால் 3 நாட்களுமே ஒரே அறையில்தான் இருவரும் இருந்தார்களாம் (ரூம் பாய் கக்கிய தகவல்). காலை முதல் இரவு வரை குவார்ட்டர் குவார்ட்டராக ரூமுக்குவரவழைத்து குடித்துக் கலக்கியுள்ளார்களாம் இருவரும்.

3 நாட்களுக்கு அவர்களுக்கு, சாப்பாட்டை விட உற்சாகபானம் தான் அதிகம் போணியானதாம். ஹோட்டல் பாரையேதற்காலிகமாக தங்களது ரூமுக்கு மாற்றிக் கொண்டு விட்ட அவர்களைப் பார்த்து, இப்படியும் குடிக்க முடியுமா என்ற ஆச்சர்யத்தில்இன்னும் "ஆஃப்" ஆகிப் போய்க் கிடக்கிறார்களாம் ஹோட்டல்காரர்கள்.

படு உற்சாகமாக கதை விவாதத்தில் மூழ்கிப் போன இருவரும் ஒரு வழியாக நார்மலாகி ரூமைக் காலி செய்தார்களாம்.

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை!

மீராவைப் பற்றிய ஒரு கொசுறு செய்தி: கடவுள் பக்தி மீரா ஜாஸ்மினுக்கு ரொம்ப அதிகமாம். வீட்டில் இருந்தால் தினசரி பூஜைபுனஸ்காரம் தான். வெளியூருக்கு படப்பிடிப்புக்கு சென்றாலும் இதை விடுவதில்லை.

இதற்காக கையோடு பூஜை பொருட்களை கொண்டு சென்று விடுவாராம். தினமும் பூஜையை முடித்து விட்டுத் தான் படப்படிப்பில்கலந்து கொள்வாராம்.

Please Wait while comments are loading...