For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மீராவின் பாதை

  By Staff
  |

  மீரா ஜாஸ்மீன் விஷால் நடிக்கும் சண்டைக்கோழி படத்தின் படப்பிடிப்பில் கத்தி பாய்ந்து விஷால் காயமடைந்தார். இதையடுத்துசூட்டிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

  சண்டைக் கோழி என்ற படத்தின் படப்பிடிப்பு சென்னை கிண்டி கேம்பகோலா மைதானத்தில் நடந்து வந்தது. இப்படத்தில்செல்லமே படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின்நடிக்கிறார்.

  ஆனந்தம், ரன், ஜி ஆகிய படங்களை இயக்கிய லிங்குசாமி தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

  ஜீவாவின் ஒளிப்பதிவில் கேம்பகோலா மைதானத்தில் படப்பிடிப்பு படு சுறுசுறுப்பாக நடந்து வந்தது.. சண்டைக் காட்சி ஒன்றைபடமாக்கிக் கொண்டிருந்தபோது வில்லனாக நடித்த லால் என்பவர் வீசிய கத்தி தவறுதலாக விஷாலின் நெற்றியில் பட்டது.இதனால் ரத்தம் கொட்டி மயங்கி விழுந்தார் ஹீரோ விஷால்.

  சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட விஷாலுக்கு அறுவைச் சிகிச்சை செய்து 8 தையல்போட்டனர். 10 நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி விஷாலுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் படப்பிடிப்புஉடனடியாக நிறுத்தப்பட்டது.

  சென்னையில் சூட்டிங்கை முடித்துவிட்டு வெளிநாடுகளில் பாடல் காட்சிகள் எடுக்க பறக்க இருந்தார்கள். அதற்குள் இந்த விபத்து.இதனால் சூட்டிங் கொஞ்சம் தள்ளிப் போடப்பட்டிருக்கிறதாம்.

  மீரா ஜாஸ்மீனுக்கு இந்தப் படம் தவிர அவருக்கு மிக வேண்டியவரான லோகிததாஸ் இயக்கும் கஸ்தூரி மான், சேரன் இயக்கும்பொக்கிஷம் ஆகிய படங்கள் கையிருப்பில் உள்ளன.

  கஸ்தூரிமான் படத்துக்கு நிதியுதவியே மீரா தான் என்கிறார்கள். மீராவுக்கு ஜோடியாக பிரசன்னா நடிக்கிறார்.

  இப்போது பொள்ளாச்சி, கேரளா பக்கமாக சூட்டிங் படு வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு இசைஇளையராஜா.

  சில வாரங்களுக்கு முன் இந்தப் படத்தின் சூட்டிங்குக்காக சென்னையில் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியிருந்தனர்மீராவும் லோகிததாசும். குடிக்குப் பேர் போனவர் லோகிததாஸ். எனவே, இந்த இருவரும் தங்கியிருந்த ரூமில் இருந்து எப்போதும்மப்பும், மந்தாரமான சூழல் தானாம்.

  மொத்தமாக 3 ரூம்களை இருவரும் புக் செய்திருந்தாலும் பெரும்பாலும் லோகிததாசின் அறையில் தான் மீராவும்தங்கியிருந்தாராம். காலை முதலே குவார்டர் பாட்டில்கள் வருகை ஆரம்பமாகிவிட்டதாம். சாப்பாட்டைவிட இந்த அயிட்டங்கள்தான் அதிகமாக இவர்களது அறைக்குப் போனதாக சொல்கிறார்கள்.

  அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

  சண்டைகோழி படத்தில் தன்னை கிளாமராகக் காட்டுமாறு தானாகவே முன் வந்து இயக்குனரிடமும் ஒளிப்பதிவாளரிடமும்கோரிக்கை வைத்துள்ளார் மீரா ஜாஸ்மீன். கேரளத்து சுந்தரிகளான கோபிகாவும், ஆசினும் கவர்ச்சியில் கண்ணாபின்னாவெனநடிக்க ஆரம்பித்துள்ளதால், தானும் அதே பாதையைத் தேர்வு செய்துவிட்டாராம் மீரா.

  தெலுங்கில் நன்றாக காட்டி நடித்தது தனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறார் மீரா.

  இது தவிர இன்னொரு விஷயம். கஜினி, கனாக் கண்டேன், ப்ரியசகி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடிக்க முதலில் என்னைத்தான் கேட்டார்கள். நான் தான் வேண்டாம் என்று அந்த வாய்ப்புக்களை ஒதுக்கிவிட்டேன் என்று மலையாளப் பத்திரிக்கைகளில்பேட்டிகள் கொடுத்து வருகிறார் மீரா.

  இந்தப் படங்களில் வாய்ப்புக்களைப் பிடிக்க அவர் தலைகீழாக நின்றும் கிடைக்காமல் போயின என்று தான் கோடம்பாக்கத்தில்சொல்கிறார்கள்.

  Read more about: meera acts in cherans film
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X