»   »  ஜில் ஜில் மீரா!

ஜில் ஜில் மீரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
மீரா வாசுதேவன் படு உட்டாலங்கடி பெண்ணாக இருக்கிறார். பொதுவாக தமிழ் சினிமாக்களில் முடிந்தவரை கிளாமர் காட்டி நடித்து விட்டுமார்க்கெட் இறங்கும்போது யாரையாவது கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடுவது நடிகைகளின் வழக்கம்.

ஆனால் இதற்கு நேர்மாறாக இருக்கிறார் மீரா வாசுதேவன். மார்க்கெட் சூடுபிடிக்கஆரம்பித்தபோது தடாலடியாக கேமராமேன் அசோக்குமாரின் மகன் விஷாலைகாதலித்துத் திருமணம் செய்து கொண்டு போனார் மீரா.

அதேநேரம், தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியிருந்தார். சொன்னபடி திருமணமாகிசில நாட்களிலேயே ஜெர்ரி படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இதில் விசேஷம் என்னவென்றால் இப்படத்திற்காக சில கிளாமர் காட்சிகளில் மீராதயங்காமல் நடித்துக் கொடுத்ததுதான். அதை விட விசேஷம் என்னவென்றால் இந்தக்காட்சிகளை கல்யாணத்திற்கு அப்புறம் நடித்துக் கொடுத்ததுதான்.

இப்போது இன்னும் ஒரு படி மேலே போயுள்ளார் மீரா. தொடர்ந்து கிளாமராகவும்நடிக்கத் தயார் என்று அவர் விட்ட ஸ்டேட்மென்ட்டைப் பார்த்து தயாரிப்பாளர்களும்,இயக்குநர்களும் ஆச்சர்யமாகியுள்ளனர்.

கல்யாணத்திற்குப் பிறகும் கிளாமர் காட்டத் தயாராக உள்ள நடிகையா என்று அவர்கள்வியக்கிறார்கள். ஆனால் மீராவிடம் இதைக் கேட்டால், இதில் என்ன இருக்கிறது.

நடிப்பு என்று வந்து விட்டால் எல்லாக் கழுதையும் ஒன்றுதானே.? இயக்குநர்கள்சொல்கிறபடி நடித்து விட்டுப் போக வேண்டியதுதான் என்கிறார் படு கூலாக.

மீராவின் துணிச்சலைப் பார்த்து இயக்குநர் கஸ்தூரி ராஜாவும் அவரை அணுகியுள்ளார்.நான் தயாரித்து, இயக்கப் போகும் இது காதல் வரும் பருவம் படத்தில் நீங்கள் ஒருகேரக்டர் செய்ய வேண்டும், ரெடியா என்று கேட்டுள்ளார்.

கண்டிப்பாக செய்கிறேன் என்று கூறிய மீராவிடம், இதில் கிரணுக்கு கிளாமரானகேரக்டர் கொடுத்துள்ளேன். எனவே அவருக்கு இணையாக நீங்களும் கிளாமர் செய்யவேண்டும் என்று கூறினாராம்.

இதைக் கேட்ட மீரா, எனக்கு நோ அப்ஜெக்ஷன். இருந்தாலும் எனது கணவரிடம் ஒருவார்த்தை கூறி விட்டு வந்து விடுகிறேன் என்று பதிலளித்தாராம். இதைக் கேட்டகஸ்தூரி ராஜா தெம்பாக உள்ளாராம், எப்படியும் மீரா வந்து விடுவார் என்றுநம்பிக்கையுடன் உள்ளாராம் கஸ்தூரி.

மாமிக்கு தில் கொஞ்சம் ஜாஸ்திதான். இல்லாவிட்டால் ஊட்டுக்காரர்கிட்டேயேபெர்மிஷன் வாங்கிக் கொண்டு கிளாமரில் ஊடு கட்ட தயாராக இருப்பாரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil