மீரா வாசுதேவன் "செட்டிலாகிறார்! தமிழில் ரெண்டே ரெண்டு படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போதுடிவிக்களில் ஒளிபரப்பான கிரிக்கெட்டாய நமஹ விளம்பரத்தில் நடித்து பிரபலமானவர். மும்பைத் தமிழச்சியான மீரா, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தயாரித்து இயக்கிய உன்னைச்சரணடைந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படம் பரவாலான வெற்றியைப் பெற்றதால் மீராவும் தமிழ் சினிமாவில் ஓரளவுக்கு பேசப்பட்டார். ஆனால் பட வாய்ப்புகள்தான் தேடியும் வரவில்லை, ஓடியும் வரவில்லை.இருப்பினும் சற்றும் மனம் தளராத மீ.வா, முரளியை காக்காப் பிடித்து அவரது அறிவுமணி படத்தில் நாயகியானார். அத்தோடுகவர்ச்சியிலும் களேபரமாக நடித்து புயலைக் கிளப்பினார். அறிவுமணியில் மீ.வா காட்டிய கவர்ச்சி போஸ்கள் பரபரப்பை ஏற்படுத்தினாலும் படம் சரியாக போணியாகததால் மீ.வாவும்ராசியில்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட்டார்.பட வாய்ப்புகள் குறைந்ததால், வேறு வழியில்லாமல் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் மீரா. இந்த நிலையில் தான் அவர்ஒருவரின் காதல் வலையில் வீழ்ந்தார். பிரபல கேமராமேன் அசோக் குமாரின் மகன் விஷால் தான் மீராவின் காதல் வலையில்விழுந்தவர்.ரொம்பத் தீவிரமாக அதே சமயம் ரகசியமாக நடந்து வந்த விஷால்-மீரா காதல், இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. சினிமாவில்வருவது போல சண்டை, கிண்டை ஏதும் போடாமல் இளசுகளின் காதலை இரு வீட்டாரும் அங்கீகரித்தனர். இதோ, இப்போதுதிருமணத்திற்கும் வந்து விட்டார்கள்.வருகிற 15ம் தேதி சென்னையில் மீரா-விஷால் திருமணம் நடக்கப் போகிறது. நட்சத்திர ஹோட்டலில் திருமணத்தை நடத்தத்திட்டமிட்டுள்ளார்களாம். திருமணத்திற்குப் பின்னர் விஷாலின் தொழிலுக்குத் துணையாக, இல்லத்தரசியாக இருக்கப்போகிறாராம் மீரா.கங்கிராட்ஸ் மீரா!

By Staff

தமிழில் ரெண்டே ரெண்டு படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போதுடிவிக்களில் ஒளிபரப்பான கிரிக்கெட்டாய நமஹ விளம்பரத்தில் நடித்து பிரபலமானவர்.

மும்பைத் தமிழச்சியான மீரா, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தயாரித்து இயக்கிய உன்னைச்சரணடைந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

முதல் படம் பரவாலான வெற்றியைப் பெற்றதால் மீராவும் தமிழ் சினிமாவில் ஓரளவுக்கு பேசப்பட்டார். ஆனால் பட வாய்ப்புகள்தான் தேடியும் வரவில்லை, ஓடியும் வரவில்லை.

இருப்பினும் சற்றும் மனம் தளராத மீ.வா, முரளியை காக்காப் பிடித்து அவரது அறிவுமணி படத்தில் நாயகியானார். அத்தோடுகவர்ச்சியிலும் களேபரமாக நடித்து புயலைக் கிளப்பினார்.

அறிவுமணியில் மீ.வா காட்டிய கவர்ச்சி போஸ்கள் பரபரப்பை ஏற்படுத்தினாலும் படம் சரியாக போணியாகததால் மீ.வாவும்ராசியில்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட்டார்.

பட வாய்ப்புகள் குறைந்ததால், வேறு வழியில்லாமல் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் மீரா. இந்த நிலையில் தான் அவர்ஒருவரின் காதல் வலையில் வீழ்ந்தார். பிரபல கேமராமேன் அசோக் குமாரின் மகன் விஷால் தான் மீராவின் காதல் வலையில்விழுந்தவர்.

ரொம்பத் தீவிரமாக அதே சமயம் ரகசியமாக நடந்து வந்த விஷால்-மீரா காதல், இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. சினிமாவில்வருவது போல சண்டை, கிண்டை ஏதும் போடாமல் இளசுகளின் காதலை இரு வீட்டாரும் அங்கீகரித்தனர். இதோ, இப்போதுதிருமணத்திற்கும் வந்து விட்டார்கள்.

வருகிற 15ம் தேதி சென்னையில் மீரா-விஷால் திருமணம் நடக்கப் போகிறது. நட்சத்திர ஹோட்டலில் திருமணத்தை நடத்தத்திட்டமிட்டுள்ளார்களாம். திருமணத்திற்குப் பின்னர் விஷாலின் தொழிலுக்குத் துணையாக, இல்லத்தரசியாக இருக்கப்போகிறாராம் மீரா.

கங்கிராட்ஸ் மீரா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X