லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் அந்த ஹாலோவீன் சீன் எப்படி எடுத்தாங்க பாருங்க.. நடிகை ஷேரிங்ஸ்!

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. திங்கட்கிழமையான இன்று ஒரு சில பிவிஆர் தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் மட்டுமே 40 சதவீதம் இருக்கைகள் நிரம்பி காணப்படுகின்றன.

டிராகன், டியூட் போல இந்த படமும் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் 3 நாள் வசூல் வெறும் 22 கோடி ரூபாய் தான் என்கிற அளவுக்குத்தான் வந்துள்ளன. விக்னேஷ் சிவன் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி ரொம்பவே நம்பிக்கையுடன் காத்திருப்பேன் எனக் கூறிய நிலையில், அவர் எதிர்பார்த்த பெரும் வெற்றி கிடைக்கவில்லை என்கின்றனர்.

Meet Aarthi Chells who acted in LIK movie she shared the Halloween scene makeover
Photo Credit:

பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த படம் வெளியானால் போதும் என்கிற மனநிலை தான் என்கின்றனர். அடுத்த படத்திலாவது அவரது நடிப்பில் ஏதாவது மாற்றங்கள் வருமா? எந்த படத்தில் நடிக்கப் போகிறார், டோலிவுட்டுக்குப் போகிறாரா என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

ஹாலோவீன் பார்ட்டி சீன்: தமிழ் சினிமா ஆடியன்ஸுக்கு புதிதாக பல விஷயங்களை காட்டுகிறேன் என ஹாலோவீன் பார்ட்டியை இந்த படத்தில் காட்சிகளாக விக்னேஷ் சிவன் வைத்துள்ளார். யோகி பாபு கான்ஜூரிங் நன் கெட்டப் போட்டுக் கொண்டு கலக்க, பிரதீப் ரங்கநாதன் பைரேட்ஸ் கெட்டப்பில் நடித்திருந்தார். ஹார்லி குயின் கெட்டப்பில் க்ரித்தி ஷெட்டி நடிக்க அவர் தண்ணீரில் மிதந்துக் கொண்டு செல்வது போன்ற காட்சியில் பிரதீப் ரங்கநாதனின் மேஜிக்கையும் காதலையும் விக்னேஷ் சிவன் வெளிப்படுத்தியிருப்பார். அந்த காட்சியில் நடித்த நடிகை ஆர்த்தி செல்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் BTS வீடியோக்களையும், சில மேக்கிங் வீடியோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

2 நிமிட காட்சிக்காக: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் வரும் அந்த 2 நிமிட வாட்டர் சீனுக்காக பல நாட்கள் இரவு பகல் பாராமல் உழைத்தோம். இப்படியொரு காட்சியில் நடிக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் சாருக்கு நன்றி என அவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோக்களை ஷேர் செய்து நன்றி தெரிவித்துள்ளார் ஆர்த்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X