48 வயதாகும் அஜித் பட நாயகி.. அந்த விஷயத்தால் காலியான சினிமா கனவு.. இப்போ என்ன பண்றாரு தெரியுமா?

மும்பை: அஜித்தின் ஆசை படத்தில் நடித்த நடிகை பூஜா பத்ரா நடிப்பின் உச்சத்தில் இருக்கும் போது ஒரேயடியாக சினிமாவை விட்டுச் செல்ல நேரிட்டது. தமிழில் ஆசை படத்தின் மூலம் அறிமுகமான பூஜா பத்ரா அதன் பின்னர் பாலிவுட்டில் பல படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அனில் கபூர், சஞ்சய் தத், சுனில் ஷெட்டி, கோவிந்தா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இந்தி படங்களில் நடித்து வந்தார்.

சினிமாவில் தனது மார்க்கெட் பீக்கில் இருக்கும் போது அமெரிக்காவை சேர்ந்த டாக்டரை திருமணம் செய்துக் கொண்டு சினிமா வாழ்க்கைக்கு குட்பை சொன்னார்.

Meet Actress Pooja Batra who lost his cinema career and faces divorce struggles in her life

அஜித் படத்தில்: உத்தர பிரதேசத்தில் ராணுவ வீரரின் மகளாக பிறந்த பூஜா பத்ரா 1993ம் ஆண்டு மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் அழகி பட்டத்தை வென்றார். 1995ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் அஜித், சுவலக்‌ஷ்மி நடிப்பில் வெளியான ஆசை படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் பூஜா பத்ரா. மீண்டும் அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும் ஹீரோயினாக நடித்திருப்பார். அதன் பின்னர் தெலுங்கில் ஒரு படத்தில் பூஜா பத்ராவாகவே வந்து சென்றார். பாலிவுட்டில் விராசத் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

திருமணத்தால் தொலைந்த கனவு: சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூஜா பத்ரா 2002ம் ஆண்டே அமெரிக்காவை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் சோனு அலுவாலியா என்பவரை திருமணம் செய்துக் கொண்டு அமெரிக்காவிற்கே சென்று செட்டில் ஆகி தனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். ஆனால், ஹாலிவுட்டில் இவருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்த நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 9 ஆண்டுகளிலேயே முதல் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

2வது கணவருடன்: அதன் பின்னர் மீண்டும் பாலிவுட்டுக்கு வந்து நடிக்க ஆரம்பித்த பூஜா பத்ரா ஏபிசிடி 2, கில்லர் பஞ்சாபி, மிரர் கேம், ஸ்குவாட் உள்ளிட்ட சில படங்களில் சீனியர் நடிகையாக நடித்து வருகிறார். கடைசியாக 2021ம் ஆண்டு ஸ்குவாட் படத்தில் நடித்த அவர் அதன் பின்னர் பட வாய்ப்புகளே கிடைக்காத நிலையில், சோஷியல் மீடியாவில் மட்டும் ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார். 2019ம் ஆண்டு நவாப் ஷா எனும் பிரபல வில்லன் நடிகரை 2வதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். திருமணத்துக்கு பின்னர் நடிக்கக் கூடாது என நடிகைகளை கணவன்மார்கள் கட்டிப் போடுவதால் தான் பல நடிகைகள் தங்கள் கனவை தொலைத்து விட்டு வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் அவர்கள் காணாமலும் போய் விடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X