Disha Patani Net Worth: 2 வருஷத்துலேயே காலேஜ் ட்ராப் அவுட்.. 33 வயதில் திஷா பதானிக்கு இத்தனை கோடி சொத்தா?
மும்பை: படிப்பின் மீது ஆர்வம் பெரிதாக செல்லாத பல பிரபலங்கள் நடிப்புத் துறையை தேர்வு செய்து ஸ்டார் ஆகி வருகின்றனர். தமிழில் கங்குவா படத்தின் மூலம் அறிமுகமான பாலிவுட் நடிகை திஷா பதானி இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது சம்பளம், ஆடம்பர வாழ்க்கை மற்றும் சொத்து மதிப்பு உள்ளிட்ட தகவல்களை இங்கே காணலாம்.
ஒவ்வொரு வருஷமும் ஜெட் வேகத்தில் திஷா பதானியின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் என பான் இந்திய நடிகையாக கலக்கி வரும் திஷா பதானி, விளம்பர தூதுவராகவும் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார்.

நடிகை திஷா பதானியின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், கல்லூரி டிராப்ப அவுட்டான கங்குவா நடிகை எப்படி பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உயர்ந்தார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
திஷா பதானி பிறந்தநாள்: கடந்த 1992 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலி எனும் ஊரில் பிறந்தவர் தான் திஷா பதானி. தனது 33வது பிறந்தநாள் இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிகில் படத்தில் வில்லனாக நடித்த ஜாக்கி ஷெராஃப்பின் மகன் டைகர் ஷெராஃப் உடன் பாகி சீரிஸ் படங்களில் நடித்து வந்த போது இருவரும் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதன் பின்னர் இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

கங்குவா, கல்கி ஹீரோயின்: தென்னிந்திய ரசிகர்களை கங்குவா மற்றும் கல்கி படங்கள் மூலம் வெகுவாக கவர்ந்தவர் நடிகை திஷா பதானி. பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 300 கோடி ரூபாய் பட்ஜெட் படமான கங்குவா திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், கோலிவுட்டில் பெரிதாக திஷா பதானிக்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்கவில்லை.
100 கோடி சொத்து: ஒரு படத்துக்கு அதிகபட்சமாக 5 முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி வருகிறார் திஷா பதானி என பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், calvin klein உள்ளிட்ட சர்வதேச உள்ளாடை விளம்பர நிறுவனத்தின் தூதராகவும் செயல்பட்டு வரும் இவருக்கு விளம்பரத்தின் மூலமாக சில கோடி ரூபாய் சம்பளம் கிடைத்து வருவதாக கூறுகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு வரை 57 கோடி ரூபாய் சொத்துக்களை வைத்திருந்த இவர், கடந்த ஆண்டு 75 கோடி வரை சொத்துக்களை அதிகரித்ததாகவும் இந்த ஆண்டு சுமார் 85 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை திஷா பதானியிடம் சொத்துக்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
காலேஜ் ட்ராப் அவுட்: லக்னோவில் உள்ள அமிட்டி யூனிவர்சிட்டியில் இன்ஜினியரிங் மாணவியாக சேர்ந்த இவர், இரண்டாம் ஆண்டிலேயே கல்லூரி படிப்பு எல்லாம் தனக்கு செட்டாகாது என நினைத்து, கல்லூரியை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் மாடலிங்கில் ஆர்வம் செலுத்திய இவருக்கு 2015 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லவ்வர் படத்தின் மூலம் நடிகையாகும் வாய்ப்பு கிடைத்தது. 2016 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான தோனியின் பயோபிக் படத்தின் மூலம் பாப்புலரான இவர் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். எனது கைவசம் தற்போது வெல்கம் டு தி ஜங்கிள் மற்றும் ஹோலிகார்ட்ஸ் உள்ளிட்ட படங்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications











