யாருப்பா இந்த ருக்மணி வசந்த்?.. இந்த வருஷம் இத்தனை படமா?.. காந்தாரா சாப்டர் 1லும் இவர்தான் ஹீரோயின்!

பெங்களூர்: நடிகை ருக்மணி வசந்த், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தில் இணைந்துள்ளார். ரிஷப் ஷெட்டி, ருக்மிணியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். காந்தாரா சாப்டர் 1 அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைத்தளமான X - இல், "காந்தாரா சாப்டர் 1 உலகத்திலிருந்து 'கனகவதி'யாக @rukminitweets ஐ அறிமுகப்படுத்துகிறோம். திரையரங்குகளில் #KantaraChapter1onOct2" என்று பதிவிட்டு ருக்மணியின் வருகையை உறுதிப்படுத்தினார். ருக்மணியும், தயாரிப்பு நிறுவனமும் பல மொழிகளில் இந்த போஸ்டரை ஷேர் செய்துள்ளனர்.

Meet Madharasi Actress Rukmini Vasanth starred lead role in Kantara Chapter 1 poster out now
Photo Credit:

வெளியான போஸ்டரில், ருக்மணி வசந்த் கனகவதி கதாபாத்திரத்தில் அரண்மனைப் பின்னணியில் சிரித்தபடி நிற்கிறார். அவர் பச்சை மற்றும் சிவப்பு நிறப் பட்டுச் சேலை அணிந்து, ஏராளமான நகைகளுடன் காட்சியளிக்கிறார். காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அண்மையில் அறிவித்த நிலையில், இந்த படத்தில் இவர்தான் ஹீரோயின் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

காந்தாராவில் கனகவதியாக ருக்மணி வசந்த்: தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில், "#KantaraChapter1 ஒரு தெய்வீக பயணம், எங்கள் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியது. இந்த புராணக்கதை அக்டோபர் 2 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தது. ருக்மணி வசந்த் தொடர்ந்து பல படங்களில் சத்தமில்லாமல் நடித்து தூள் கிளப்பி வருகிறார்.

பாக்ஸ் ஆபீஸ் வேட்டை: 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம், 2022 இல் பெரும் வெற்றி பெற்ற 'காந்தாரா'வின் முன்தோற்றப் பகுதியாகும். ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த முதல் காந்தாரா திரைப்படம், ₹16 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, உலகளவில் ₹400 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரிஷப் ஷெட்டி இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.

Meet Madharasi Actress Rukmini Vasanth starred lead role in Kantara Chapter 1 poster out now
Photo Credit:

இந்த வருடமே இத்தனை படங்களா?: இப்படம் தட்சிண கன்னடாவில் உள்ள ஒரு கற்பனைக் கிராமத்தில் நடைபெறுகிறது. இது ஒரு கம்பாளா வீரர், நேர்மையான வனத்துறை அதிகாரியை எதிர்கொள்வதை மையமாகக் கொண்டது. ருக்மணி வசந்த் 2019 இல் 'பீர்கால் ட்ரைலாஜி' மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 'சப்த சாகராதாச்சே எல்லோ', 'அப்ஸ்டார்ட்ஸ்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'ஏஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், வரும் செப்டம்பர் 5ம் தேதி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்திலும் ருக்மணி வசந்த் தான் ஹீரோயின். கூடிய சீக்கிரமே இவரும் ராஷ்மிகா, ஸ்ரீலீலா போல பாலிவுட்டுக்கும் பறந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம அழகு: விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற உருப்படியான விஷயமே ருக்மணி வசந்த் தான் என ஓடிடியில் படத்தை பார்த்த பலரும் அவரது அழகுக்கு அடிமையாகி விட்டனர். கண்டிப்பாக விஜய் சேதுபதி படம் அவருக்கு தமிழில் சொதப்பியது போல சிவகார்த்திகேயன் படம் சொதப்பாது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காந்தாரா சாப்டர் 1 படம் எல்லாம் சொல்லவே தேவையில்லை. இந்த ஆண்டின் டாப் நடிகை லிஸ்ட்டில் நிச்சயமாக இவருக்கு பெரிய இடம் காத்திருக்கிறது என்பது மட்டும் கன்ஃபார்ம். காந்தாரா 2 பட்ஜெட்டே 400 கோடிக்கும் மேல் என்கின்றனர். 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X